Published:Updated:

கடலோர காவல் படை டோர்னியர் விமானம் திடீர் மாயம்!

கடலோர காவல் படை டோர்னியர் விமானம் திடீர் மாயம்!
கடலோர காவல் படை டோர்னியர் விமானம் திடீர் மாயம்!

கடலோர காவல் படை டோர்னியர் விமானம் திடீர் மாயம்!

கடலோர காவல் படை டோர்னியர் விமானம் திடீர் மாயம்!

சென்னை: கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் என்ற சிறிய ரக விமானம் ஒன்று திடீரென மாயமாகி உள்ளது. அதில் இருந்த 3 பேரின் கதி தெரியாமல் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்ற கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் என்ற சிறிய ரக விமானம் ஒன்று திடீரென மாயம் ஆகி உள்ளது. ஆப்ரேஷன் ஆம்லா ஒத்திகைக்காக சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்ற அந்த சிறிய விமானம் திரும்பவில்லை.

புதுச்சேரிக்கு சென்ற விமானம் சென்னை திரும்பாததால் ஆப்ரேஷன் ஆம்லா ஒத்திகை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த விமானம், நடுவானில் வெடித்துச் சிதறியதா அல்லது கடத்தப்பட்டதா என தெரியாமல் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், அந்த விமானத்தில் சென்ற 2 விமானிகள் உள்ளிட்ட 3 பேரின் கதி என்னவென்று தெரியாததால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. புதுச்சேரிக்கு செல்லும் முன் காரைக்கால் கடல் பகுதியில் இந்த விமானம் மாயமானதாக கூறப்படுகிறது. திருச்சி கட்டுப்பாட்டு ரேடாரில் இருந்து இந்த விமானம் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென மாயமாகி உள்ளது.

புதுச்சேரி கடல்பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் தமிழக கடலோர காவல் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேபோல், கடல் பகுதியில் 9 கடற்படை கப்பல்களும், 2 ஹெலிகாப்டர்களும் காணாமல் போன சிறிய ரக விமானத்தை தேடி வருகின்றன. இதுமட்டுமல்லாமல், கடலூர் மற்றும் புதுச்சேரி  பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் இந்த டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

-ஜெ.முருகன்

அடுத்த கட்டுரைக்கு