Published:Updated:

ஜார்க்கண்ட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்ட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜார்க்கண்ட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்ட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்ட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

பாலமு: ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே ஏற்பட்ட மோதலில் 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

சாத்பார்வா காவல் நிலையம் நோக்கி, மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் நக்சலைட் தீவிரவாதிகள் சாலையில் வருவதாக ஜார்க்கண்ட் மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. உடனே விரைந்து சென்ற போலீசார், தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நக்சலைட் தீவிரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இதை தொடர்ந்து போலீசாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீசாரின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் நக்சலைட் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து உள்ளனர். அப்போது, போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தியபோது 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், தீவிரவாதிகள் வந்த காரில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் நவீன ரக ஆயுதங்களை பெருமளவில் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

இந்த மோதலில் சில போலீசாருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு