Published:Updated:

பெண் பயணியிடம் அத்துமீறிய எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்!

பெண் பயணியிடம் அத்துமீறிய எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்!
பெண் பயணியிடம் அத்துமீறிய எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்!

பெண் பயணியிடம் அத்துமீறிய எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி: பெண் பயணியிடம் அத்துமீறி நடந்து கொண்ட திண்டுக்கல் காவல்துறை உதவி ஆய்வாளர் லட்சுமணன் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

பெண் பயணியிடம் அத்துமீறிய எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்!

திருச்சியிலிருந்து குமுளி சென்ற அரசு பேருந்தில் (TN 58 N 1975) கடந்த 10ஆம் தேதி பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையில் அடாவடியாக வந்து உட்கார்ந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர், அப்பெண்ணிடம் அத்துமீறும் வகையில் நடந்து கொண்டார்.

நிலைமை எல்லை மீறிச் செல்லவே, ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண், இருக்கையிலிருந்து எழுந்து நின்றபடியே, அருகில் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனரிடம், அந்த எஸ்.ஐ.-யை வேறு இருக்கையில் அமரச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதனை நடத்துனர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் வழியைவிட்டால் தாமே வேறு இருக்கைக்கு சென்றுவிடுவதாக அந்த பெண் கூறியும், 'ஸ்டாப்பிங் வரட்டும்... நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில், அருகில் இருந்த மற்ற பயணிகள் ஆவேசமடைந்து, அந்த எஸ்.ஐ-யை தட்டிக்கேட்க தொடங்கவும், 'நான் செய்தது தப்புதான்...!' என்று போதையில் தள்ளாடியபடியே கூறினார் போதை போலீஸ்.
 

பெண் பயணியிடம் அத்துமீறிய எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்!

விசாரித்ததில் அந்த போதை போலீஸ் திண்டுக்கல் அருகே உள்ள அம்மைய நாயக்கநல்லூர் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய லட்சுமணன் என்று தெரியவந்துள்ளது.

பெண்ணிடம் அத்துமீறிய ரகளை செய்த வீடியோ காட்சி விகடன் டாட் காமில் வெளியானதை தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணனை, ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி நிலக்கோட்டை டிஎஸ்பி சுருளியாண்டிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவரது அறிக்கைக்கு பின்னர் அடுத்த கட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. சரவணன் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு