Published:Updated:

தேர்தல் படுத்தும்பாடு: ஏற்கனவே திறக்கப்பட்ட கட்டடங்களுக்கு மீண்டும் திறப்பு விழா!

தேர்தல் படுத்தும்பாடு:  ஏற்கனவே திறக்கப்பட்ட கட்டடங்களுக்கு மீண்டும் திறப்பு விழா!
தேர்தல் படுத்தும்பாடு: ஏற்கனவே திறக்கப்பட்ட கட்டடங்களுக்கு மீண்டும் திறப்பு விழா!

தேர்தல் படுத்தும்பாடு: ஏற்கனவே திறக்கப்பட்ட கட்டடங்களுக்கு மீண்டும் திறப்பு விழா!

தேர்தல் கணக்கை மனதில் கொண்டு ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் கட்டடங்களை மீண்டும் ஒரு முறை திறப்பு விழாவிற்கு உட்படுத்துகிறது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் போடி தொகுதிக்கு உட்பட்ட மேலசொக்கநாத புரத்திலுள்ள அரசு பொறியியற் கல்லூரியை காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இதில் அதிர்ச்சி என்னவென்றால் இந்த கல்லுாரி ஏற்கனவே திறக்கப்பட்டு, மாணவர்கள் தற்போது செமஸ்டர் விடுமுறையில் இருக்கிறார்கள் என்பதுதான்.

தேர்தல் படுத்தும்பாடு:  ஏற்கனவே திறக்கப்பட்ட கட்டடங்களுக்கு மீண்டும் திறப்பு விழா!

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை ஆகி வெளிவந்தபின் அவரது அரசியல் பயணத்தின் தடை அகற்றப்பட்டிருக்கிறது. இதனால் அடுத்த வருடம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த அவலத்தை அரசு அரங்கேற்றியிருக்கிறது என்கிறார்கள்.

கடந்த 2012 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா. அந்த வருடத்திலேயே மாணவர் சேர்க்கையும் நடந்தது. கட்டடங்கள் எழும்பாததால் தற்காலிகமாக அருகிலுள்ள கலா பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரம்பத்தில் வகுப்புகள்  நடத்தப்பட்டன. ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதி என்பதால் அவசர அவசரமாக பணிகள் நடந்தன.

அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது. பொறியியல்  மாணவர் களுக்கான அத்தியாவசிய தேவைகளான வகுப்பறை, ஆய்வகம், விடுதி, விளையாட்டு மைதானம் போன்றவைகள் அந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தேர்தல் படுத்தும்பாடு:  ஏற்கனவே திறக்கப்பட்ட கட்டடங்களுக்கு மீண்டும் திறப்பு விழா!

கல்லூரி கட்டடம் பாதி முடிந்தநிலையிலேயே, கடந்த ஜனவரி மாதம் மாணவர்கள்  கல்லூரிக்கு  தாங்களாகவே இடம்பெயர்ந்தனர். இதனால் கடந்த ஐந்து மாதங்களாக இக்கல்லூரியில்  வகுப்புகள்  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் கடந்த சிலதினங்களாக ஏற்கனவே செயல்பட்டு வந்த, கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா தள்ளிப்போடப்பட்ட திட்டங்கள் தற்போது துவங்கப்படுகின்றன.அந்த வரிசையில்தான் மேலசொக்கநாத புரம் அரசு பொறியியற் கல்லூரி கட்டடத்தை காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து ஜெயலலிதா திறந்து(?) வைத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம், “ தமிழக முதல்வரான அம்மா , அரசு பொறியியற் கல்லூரியில் அனைத்து கட்டமைப்புகள் வசதிகளை கொண்ட கல்லூரியை அவருடைய பொற்கரங்களால் திறந்து வைத்திற்கு நன்றி அம்மா“ என அமைச்சரை விஞ்சி அம்மா புகழ் பாடினார்.

தேர்தல் படுத்தும்பாடு:  ஏற்கனவே திறக்கப்பட்ட கட்டடங்களுக்கு மீண்டும் திறப்பு விழா!

கிளிப்பிள்ளைகள் போல அங்கிருந்த மாணவிகளும் அம்மா, அம்மா என உருகினார்கள்.

“இப்ப எங்களுக்கு செமஸ்டர் லீவு. சிலருக்கு அரியர் எக்ஸாம் இருக்கும். அந்த பசங்க மட்டும்தான் இங்க இருக்காங்க. அதே மாதிரி கடைசி வருசம் படிக்குற பசங்க,  எங்களோட உயர்கல்விக்கான தேர்வுக்காக படிக்கிறோம். காலேஜ் படிக்கிற மாணவர்கள் இல்லாத சமயம் இந்த திறப்பு விழா எதுக்கு” என்றார் விடுமுறையில் இருக்கும் ஒரு மாணவர்.

கல்லூரியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக மாணவர்கள் போராடி வருகிறார்கள். திறப்பு விழா வின்போது அதற்கு ஒரு தீர்வு சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. தேவையற்று 2 திறப்புவிழாவினை நடத்தி என்ன பிரயோசனம்? என்கின்றனர் அவர்கள். 

எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு!

- உ.சிவராமன்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

 

 
 

அடுத்த கட்டுரைக்கு