Published:Updated:

மாயமான விமானத்தின் சிக்னல் கிடைத்தது: மீட்பு கப்பல் விரைவு!

மாயமான விமானத்தின் சிக்னல் கிடைத்தது: மீட்பு கப்பல் விரைவு!
மாயமான விமானத்தின் சிக்னல் கிடைத்தது: மீட்பு கப்பல் விரைவு!

மாயமான விமானத்தின் சிக்னல் கிடைத்தது: மீட்பு கப்பல் விரைவு!

காரைக்கால்: மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதாக கடலோர பாதுகாப்பு படை கிழக்கு பிராந்திய ஐஜி எஸ்.பி.ஷர்மா தெரிவித்துள்ளார். இதனையடுத்து மீட்புக் கப்பல் விரைந்துள்ளது.
 

மாயமான விமானத்தின் சிக்னல் கிடைத்தது: மீட்பு கப்பல் விரைவு!

இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டார்னியர் என்ற சிறியரக விமானம் ஒன்று கடந்த திங்கள் அன்று இரவு 3 பேருடன் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதாக கடலோர பாதுகாப்பு படை கிழக்கு பிராந்திய ஐஜி எஸ்.பி.ஷர்மா தெரிவித்துள்ளார்.

காரைக்கால் அருகே தேடியபோது கடற்படை கப்பலின் சோனார் கருவிக்கு சிக்னல் கிடைத்துள்ளதாகவும், கருப்புப்பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில் கடலோர பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், கருப்பு பெட்டியை மீட்க நீர்மூழ்கி கப்பலான சிந்துராஜ் இன்று மாலையில் வருகிறது என்றும் ஷர்மா தெரிவித்துள்ளார்.

 

அடுத்த கட்டுரைக்கு