Published:Updated:

லண்டன் சென்ற பயணிக்கு பல்லியுடன் 'பர்கர்' வழங்கிய ஏர் இந்தியா!

  லண்டன் சென்ற பயணிக்கு பல்லியுடன் 'பர்கர்' வழங்கிய ஏர் இந்தியா!
லண்டன் சென்ற பயணிக்கு பல்லியுடன் 'பர்கர்' வழங்கிய ஏர் இந்தியா!

லண்டன் சென்ற பயணிக்கு பல்லியுடன் 'பர்கர்' வழங்கிய ஏர் இந்தியா!

டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்தது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  லண்டன் சென்ற பயணிக்கு பல்லியுடன் 'பர்கர்' வழங்கிய ஏர் இந்தியா!

டெல்லியில் இருந்து ஏர் இந்தியா (ஏஐ 111)விமானம் ஒன்று, இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வியாழக்கிழமை மதியம் ஒரு மணியளவில் கிளம்பியது. அப்போது விமானத்தில் இருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பயணி, இது குறித்து விமானப் பணிப் பெண்களிடம் புகார் கூறினார்.

இதையடுத்து விமானப்பணிப் பெண்கள் அவருக்கு மாற்று உணவை வரவழைத்து கொடுத்தனர். எனினும் அந்த பயணி அந்த உணவை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். லண்டன் சென்றடைந்ததும் இது குறித்து ஏர்இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு அந்த பயணி எழுத்து முலமாக புகார் அளித்தார். ஆனால் அவரது புகார் மனுவுக்கு ஏர்இந்தியா தரப்பில் எந்த பதிலும் இல்லையாம்...!

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, '' இது மிகவும் மோசமான ஒரு சம்பவம் . ஏர் இந்தியா பல்லிகள் வழங்குவது , அல்லது சமையல்காரர்கள் பல்லிகள் சமைப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றார்.

இதற்கிடையே இந்த செய்தியை ஏர்இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

 

அடுத்த கட்டுரைக்கு