Published:Updated:

`மகளுடன் செல்பி`: ஹரியானா பெற்றோர்களுக்குப் போட்டி!

 `மகளுடன் செல்பி`: ஹரியானா பெற்றோர்களுக்குப் போட்டி!
`மகளுடன் செல்பி`: ஹரியானா பெற்றோர்களுக்குப் போட்டி!

`மகளுடன் செல்பி`: ஹரியானா பெற்றோர்களுக்குப் போட்டி!

சண்டிகர்: பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்ததையடுத்து, ஹரியானா மாநில கிராம பஞ்சாயத்து, பெற்றோர்களுக்கு  'பெண் குழந்தைகளுடன்  செல்பி எடுக்கும் போட்டி'  நடத்தப்படுகிறது. இதில் சிறந்த 'செல்பி போட்டோ' பதிவு செய்யும் பெற்றோருக்கு பரிசுக்கோப்பையும்' பணப்பரிசும் வழங்கப்படுகிறது. 

 `மகளுடன் செல்பி`: ஹரியானா பெற்றோர்களுக்குப் போட்டி!

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாநிலத்தில் உள்ள பிபிபூர் கிராமப் பஞ்சாயத்து இந்த  சிறப்புப் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தையுடன் எடுத்துக்கொள்ளும் செல்பியை கிராம பஞ்சாயத்துத் தலைவருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கவேண்டும்.அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த செல்பிக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

இது தொடர்பாக பிபிபூர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஜக்லான் கூறுகையில், "பெண் பிறப்பு விகிதம் குறைந்து விட்டதால் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் இதுவரை 100 செல்பிகள் பதிவாகி உள்ளன.வரும் 19 ஆம் தேதி தேர்வுக்குழு,  சிறந்த செல்பியை தேர்ந்தெடுத்த பின்னர், பரிசுகள் வழங்கப்படும் ' என்றார்.

ஹரியானா மாநிலத்தின் பெண்கள் பிறப்பு விகிதம் 1000 ஆண்களுக்கு 871 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு