Published:Updated:

சர்வதேச உதவியை பெற்று விமானத்தை தேடுங்கள்: விமானி சோனியின் மனைவி!

சர்வதேச உதவியை பெற்று விமானத்தை தேடுங்கள்: விமானி சோனியின் மனைவி!
சர்வதேச உதவியை பெற்று விமானத்தை தேடுங்கள்: விமானி சோனியின் மனைவி!

சர்வதேச உதவியை பெற்று விமானத்தை தேடுங்கள்: விமானி சோனியின் மனைவி!

சர்வதேச உதவியை பெற்று விமானத்தை தேடுங்கள்: விமானி சோனியின் மனைவி!

சென்னை: மாயமான விமானத்தை சர்வதேச அளவில் உதவியை பெற்று நவீன உபகரணங்களுடன் தேட வேண்டும் என்று விமானி சோனியின் மனைவி வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் இருந்து கடந்த 8 ஆம் தேதி புறப்பட்டு சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் ரக சிறிய விமானம் திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த விமானிகள் சுபாஷ்சுரேஷ், எம்.கே.சோனி, கமாண்டர் வித்யாசாகர் ஆகியோரின் கதி என்ன என்பது இதுவரையில் தெரியவில்லை. மேலும், மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானி எம்.கே.சோனியின் மனைவி அம்ருதா, சென்னையில் செய்தியாளர்களிடம் உருக்கமாக கூறும்போது, ''போபாலில் வசித்து வந்த நாங்கள், போரூர் அடுத்த முகலிவாக்கம், ஏ.வி.கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வசித்து வருகிறோம். விமானியான எனது கணவருக்கு அரசு குடியிருப்பில் இதுவரை வீடு ஒதுக்கப்படாததால் இங்கு வசித்து வருகிறோம்.

கடந்த 8 ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவருடன் சென்ற மற்ற விமானிகளும் விமானத்தோடு மாயமாகி உள்ளனர். மாயமான விமானம் குறித்து தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. தேடுதல் பணியில் எந்தவித குறைபாடும் இல்லை, திருப்திகரமாக உள்ளது. ஆனாலும் இதுவரை காணாமல் போன விமானம், அதில் பயணம் செய்த எனது கணவர் மற்றும் இருவர் பற்றி எந்தவித தகவலும் இல்லை.

சர்வதேச உதவியை பெற்று விமானத்தை தேடுங்கள்: விமானி சோனியின் மனைவி!

தற்போது நீர் மூழ்கி கப்பல் மூலம் ஆழ்கடலுக்குள் சென்று தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் நம்மிடம் 400 அடி ஆழம் வரை தான் சென்று தேடும் வசதி கொண்ட உபகரணங்கள் உள்ளது. இதைவிட 800 அடி, 1,000 அடி வரை கடலுக்குள் சென்று தேடும் அதி நவீன உபகரணங்கள் உள்ளன. ஆனால் அந்த உபகரணங்கள் நம்மிடம் இல்லை. அதற்கு சர்வதேச அளவிலான உதவியை நாடி தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இந்த சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் பேசி உள்ளோம். விமானம் கடலில் விழுந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் கடலில் இதுவரை விமானத்தின் எந்த வித உதிரிப்பாகங்களும் கிடைக்கவில்லை. விமானம் கடலில் விழுந்தது உறுதியாகாத நிலையில், அடர்ந்த வனப்பகுதிகளிலும் விழுந்து இருக்கலாம். எனவே வனப்பகுதிகளிலும் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

எனது கணவருக்கு நீச்சல் தெரியும். எனவே விமானம் கடலில் விழுந்து இருந்தால் எனது கணவர் நீச்சல் அடித்து எப்படியாவது தப்பி இருப்பார். எனது கணவர் உள்பட 3 பேரும் பாதுகாப்புடன் பத்திரமாக மீண்டு வருவார்கள். இதுவரை அவர்களை பற்றி எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் எனது கணவர் உள்பட 3 பேரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்றே நானும், எனது குடும்பத்தினரும் நம்புகின்றோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு