Published:Updated:

ஐ.பி.எஸ். அர்ச்சனா ராமசுந்தரம் தேசிய குற்ற ஆவண அலுவலக இயக்குனராக நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐ.பி.எஸ். அர்ச்சனா ராமசுந்தரம் தேசிய குற்ற ஆவண அலுவலக இயக்குனராக நியமனம்!

புதுடெல்லி: தமிழ்நாட்டின் மூத்த ஐ.பி.எஸ்.அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தேசிய குற்ற ஆவண இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் 1980 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலைச் சேர்ந்தவர், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம். இவர் சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குனராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அதில் சில சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில்   ‘ரிட்’ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் சி.பி.ஐ.யில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அர்ச்சனா, ‘என்.சி.ஆர்.பி.’ என்னும் தேசிய குற்ற ஆவண அலுவலக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மத்திய அமைச்சரவையின்   நியமன குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. தற்காலிகமாக இந்த பதவி, தலைமை இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய பதவியில் அர்ச்சனா ராமசுந்தரம் பதவி ஏற்ற நாளில் இருந்து 2 ஆண்டுகள் அல்லது அவர் 2017 ஆம்  ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் தேதி பணி நிறைவு செய்கிற வரையில் தொடரலாம் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மத்திய அரசின் பணியாளர் நலன், பயிற்சி துறை வெளியிட்டுள்ள இந்த நியமன அறிவிப்பு, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு