Published:Updated:

உடலைத் தொற்றிய ஊனம் உள்ளத்தை தொடவில்லை!

உடலைத் தொற்றிய ஊனம் உள்ளத்தை தொடவில்லை!
உடலைத் தொற்றிய ஊனம் உள்ளத்தை தொடவில்லை!

உடலைத் தொற்றிய ஊனம் உள்ளத்தை தொடவில்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உடலைத் தொற்றிய ஊனம் உள்ளத்தை தொடவில்லை!

நாவல்காட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காந்தி வீடு எது? என்று கேட்டால் சரியாக அடையாளம் காண்பிக்கிறார் கள். 

குமரி மாவட்டத்தின் ஈசாந்திமங்கலம் அடுத்த நாவல்காடு ஊரைச் சேர்ந்த காந்திலால், மஸ்குலர் ஸ்டிஸ்ராபி எனும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர். நோயை காரணமாக்கி வீட்டில் முடங்கிப் போகாமல் அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆனந்தம் அடைகிறார் இந்த மனிதர்.

தங்களது எந்த பணிகளுக்கும் அடுத்தவர்களை எதிர்நோக்கியிருப் பது மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள மனச் சங்கடம். தன்னம்பிக் கையாலும், தான் கற்ற கல்வியாலும் அதை வென்று அடுத்த வர்களுக்கு உதவியாக இருக்கிறார் நாவல்காந்தி.

ஆம்... ஊர்க்காரர்களின் எந்த பிரச்னை தொடர்பாகவும், மனு எழுதிக்கொடுப்பது அவர்களின் அரசு  உதவிகள் மற்ற விஷயங்களில் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து, எழுதப்படிக்க தெரியாதவர்களின் உற்ற நண்பனாக விளங்குகிறார்  இவர்.

“அப்பா ஒரு விவசாயி. நல்லாத்தான் இருந்தேன். எட்டாவது படிக்கும்போது ஒருநாள் பள்ளியில இருந்து வீட்டுக்கு வந்தப்ப உடம்பு முடியாம போச்சு. கொஞ்ச கொஞ்சமாக என்னால் சுயமா செயல்படமுடியாத நிலை ஏற்பட்டது. 'மஸ்குலர் ஸ்டிஸ்டிராபி' நோய் னு பிறகு தெரியவந்திச்சு. இப்படி பாதிக்கப்பட்டதால, மத்தவங்களைப் போல ஓடி, ஆட ஏன் நடக்க கூட முடியாது. நடக்கும் போது சில நேரம் கீழ விழுந்துரு வேன். ஆரம்பத்தில் இது ஸ்டைலுன்னு நிறைய பேரு என்ன பாத்து சிரிச்சாங்க.

எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் குணமாகலை. என் எதிர்காலம் இனி முடங்கிடுமோன்னு பயந்தேன். இருந்தாலும் படிப்பை விடக்கூடாதுங்கறதுல உறுதியாக இருந்தேன். காலேஜ் போனபோது ரொம்ப சிரமப்பட்டுதான் போனேன். பி.காம் முடிச்சிட்டு எம்.காம். படிப்பை கரஸ்பான்டன்ஸ்ல படிச்சேன். இப்போ அரசு தேர்வுகள் எழுதிட்டு இருக்கேன்” -உற்சாகம் குறையாமல் நாஞ்சில் நாட்டுத் தமிழில் பேசுகிறார் நாவல்காந்தி.

உடலைத் தொற்றிய ஊனம் உள்ளத்தை தொடவில்லை!

ஒருத்தர் உதவியில்லாம என்னால் அசையக் கூட முடியாது. ஆனா எழுதுறதுக்கு யார் உதவியும் தேவைப்படல. வீட்டுலயே முடங்கிட்டோமே யாருக்கும் பயன்படமாட்டோமோ என்கிற கவலை அதிகமா இருந்திச்சி. அந்த சமயத்தில்தான் காலம் முழுக்க யாரையோ எதிர்பார்க்கிற நாம, நாம் கற்ற கல்வி மூலம் நம்மால உதவியை பிறருக்கு செய்தால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது.

எழுதப் படிக்கத் தெரியாதவங்களுக்கு மனு எழுதி கொடுப்பேன். அம்மா திட்டம், முதியோர் பென்சன், ரேசன் கார்டு, திருமண உதவி தொகையினு பலதரப்பட்ட மனுக்களை எழுதி கொடுக்கிறேன். அரசு தொடர்பான சிக்கல்களுக்கு எனக்கு தெரிஞ்ச வழியை சொல்றேன்.

என்ன பிரச்சனைக்கு யாருக்கு மனு கொடுக்கனும்னு தேடி வர்றவங்களுக்கு சொல்வேன். இதனால் ஏற்படுகிற திருப்தியில் இந்த நோய் பற்றிய வருத்தம் கொஞ்சம் கூட இல்ல. கூடவே இலக்கிய ஆர்வமும், எழுதுற ஆர்வமும் எனக்கு இன்னும் அந்த கவலைகளை மறக்க முடிஞ்சது” என்கிற நாவல்காந்தி கதை, கவிதைகளை எழுதுவதில் பெரிதும் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

உடலைத் தொற்றிய ஊனம் உள்ளத்தை தொடவில்லை!

இதுவரை இரண்டு கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுருக்கிறார். அதில் 'காலம் இன்னும் இருக்கிறது' எனும் அவரது நூல், தமிழக நூலகத்துறையால் நூலகங்களுக்கு தேர்வாகி பலதரப்பட்ட மக்களையும் சென்றடைந்திருப்பதாக சொல்லி பெருமை கொள்கிறார்.  அவரது கவிதைகள் சிற்றிதழ்களில் வெளியாகி வருவதை சொல்லும்போது ஊனத்தை வென்ற ஒரு உற்சாகம் தெரிகிறது அவர் முகத்தில்.

“இப்போது ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன். அது விரைவில் நுாலாக வெளிவரும் என நம்புகிறேன். உண்மைய சொல்லனும்னா எனக்கு எழுதவே நேரம் போதவில்லை. என்னைப் போல உள்ளவங்க மனதளவில் சோர்வ டையக் கூடாது. கடவுள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனிப்பட்ட திறமையை ஒளிச்சி வெச்சிருக்கார்.

அதைத் தேடி வெளிக்கொண்டுவந்துவிட்டால் எந்த ஊனமும் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது. எனக்கு இருக்கும் நோயால் நான் முடங்கி விட வில்லை, என் முயற்சிகளை வானில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் திருப்தியடைகிறேன்” என்கிறார் நாவல்காந்தி.

உடலில் ஊனமிருந்தாலும் அதை உள்ளத்தில் தொற்றிக்கொள்ள விடாத நாவல்காந்தி பாராட்டுக்குரியவர் தான் சந்தேகமில்லை.!

- த.ராம்
படங்கள்: ரா.ராம்குமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு