Published:Updated:

ஆர்.கே.நகர் 181வது வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆர்.கே.நகர் 181வது வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது!

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 181வது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவின்போது சில குளறுபடி ஏற்பட்டதால், அந்த வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அந்த தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டை பகுதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள 181வது வாக்குச் சாவடியில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நபர்களையும் வாக்களிக்க வாக்குச் சாவடி அதிகாரி அனுமதியளித்ததாக, அங்கிருந்த தேர்தல் பார்வையாளர், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் தேர்தல் நடவடிக்கைகளில் தவறு நிகழ்ந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அந்த வாக்குச்சாவடியில் இன்று (ஜூன் 29) மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த வாக்குச்சாவடியில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 423 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 219 ஆண்கள், 204 பெண்கள் உள்ளனர். இந்த வாக்குச் சாவடியில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு