Published:Updated:

நான் ஊழல் செய்யவில்லை... விசாரணையை சந்திக்க தயார்: பங்கஜா முண்டே!

நான் ஊழல் செய்யவில்லை... விசாரணையை சந்திக்க தயார்: பங்கஜா முண்டே!
நான் ஊழல் செய்யவில்லை... விசாரணையை சந்திக்க தயார்: பங்கஜா முண்டே!

நான் ஊழல் செய்யவில்லை... விசாரணையை சந்திக்க தயார்: பங்கஜா முண்டே!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நான் ஊழல் செய்யவில்லை... விசாரணையை சந்திக்க தயார்: பங்கஜா முண்டே!

மும்பை: நான் ஊழல் எதுவும் செய்யவில்லை, அதனால் விசாரணையை சந்திக்க தயாராக உள்ளேன் என்று மத்திய அமைச்சர் பங்கஜா முண்டே தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர பா.ஜனதா கூட்டணி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவர் மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடலை மிட்டாய் மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக ரூ.206 கோடி வரையிலான ஒப்பந்தங்களை டெண்டர் இல்லாமல் ஒரே நாளில் அனுமதித்ததாகவும், இதில் அவர் ஊழல் புரிந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து உள்ளது.

பா.ஜ.க. சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ஸ்ம்ரிதி இரானி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகிய பெண் அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி உள்ள நிலையில், மகாராஷ்டிர பெண் அமைச்சர் பங்கஜா முண்டேயின் ஊழல் புகாரும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பங்கஜா முண்டே.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''எனது அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டும் நோக்கில் எதிர்க்கட்சிகள் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகின்றன. ஒப்பந்தங்களை அனுமதிக்கும் முடிவு முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எடுக்கப்பட்டதாகும். இந்த தடவை குழந்தைகள் மேம்பாட்டுக்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைத்தது. அதை நான் சரியான முறையில் பயன்படுத்தி உள்ளேன்.

நான் ஊழல் எதுவும் செய்யவில்லை. ஒப்பந்தங்களை வழங்கியதில் எந்த ஒரு விதிமுறையையும் மீறவில்லை. ஒப்பந்தங்களை வழங்கியது, எனது தனிப்பட்ட முடிவு அல்ல. அது அரசின் கூட்டு முடிவு. இந்த பிரச்னையில் எந்த விதிமுறையையும் மீறப்படவில்லை என்பதால் நான் பதவி விலகப்போவதில்லை. அப்படி பதவி விலகிவிட்டால், நான் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடும். அதனால் என் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையை சந்திக்கவும் தயாராக உள்ளேன். இதை முதல்வர் தேவேந்திர பட்னாவிசிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்" என்று கூறி உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு