Published:Updated:

10 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது!

10 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது!
10 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது!

10 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் இருந்து - ஆலந்தூருக்கும், ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டிற்கும் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
 

10 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது!

சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் இடையே, மெட்ரோ ரயில் சேவையை  முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

சென்னை கோயம்பேடு- ஆலந்தூருக்கும், ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டிற்கும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

ஆலந்தூர்- கோயம்பேடு இடையே இரவு 10.03க்கு கடைசி ரயில் இயக்கப்படும் என்றும், கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு இரவு 9.40 மணிக்கு கடைசி ரயில் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து காலை 6 மணிக்கு மெட்ரோ ரயில் புறப்படும் என்றும், ஆலந்தூரில் இருந்து கோயம்பேடுக்கு காலை 6.03 மணிக்கு முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 நிமிடங்களில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு சென்றடையலாம் என்றும், மெட்ரோ ரயில் மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் -கோயம்பேடு, கோயம்பேடு- ஆலந்தூர் இடையேயான ரயில் சேவை, ஒரு நாளைக்கு 192 முறை இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு