Published:Updated:

ஆம்பூர் சம்பவம் : எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!

ஆம்பூர் சம்பவம் : எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!
ஆம்பூர் சம்பவம் : எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!

ஆம்பூர் சம்பவம் : எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர்: ஆம்பூர் இளைஞர் சமீல் அகமது மரணத்திற்காக காவல் ஆய்வாளர் மார்ட்டினை கைது செய்யக்கோரி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் தலைமையில் வேலுார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. 

ஆம்பூர் சம்பவம் : எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!

ஆம்பூரை சேர்ந்த சமீல் அகமது என்பவர், கடந்த 15 ஆம் தேதி பள்ளிகொண்டாவை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போன வழக்கின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். பின்னர் 18ஆம் தேதி திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படும் அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 26-ஆம் தேதி இறந்தார். காவல்துறையினரின் சித்ரவதையினால் வாலிபர் சமீல் அகமது இறந்ததாக  அவரது உறவினர்கள் புகார் கூறினர்.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது, ஆம்பூரில் போலீஸ் வாகனங்கள் கடைகள் தீ வைக்கப்பட்டு கலவரமானது. அதன் பிறகு உடனடியாக காவல் ஆய்வாளர் மார்ட்டின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்பொழுது அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது.

ஆம்பூர் சம்பவம் : எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!

மார்ட்டினை கைது செய்யக்கோரி இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் தலைமையில், 30 க்கும் மேற்பட்டோர் இன்று வேலுார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்தி நிறுத்திய காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. 

இதனிடையே ஆம்பூரில் கலவரம் நடந்த பகுதியை மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவா ஹிருல்லா இன்று பார்வையிட்டார். இதற்கு முதலில் அனுமதி மறுத்த காவல்துறை,  பிறகுதான் அனுமதி வழங்கியது.

ஆம்பூர் எம்.எல்.ஏ அஸ்லாம் பாஷாவுடன் சம்பவம் குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

- அ.அச்சணந்தி
படங்கள் : ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு