Published:Updated:

பிரதமர் மோடி அறிமுகம் செய்த `மகளுடன் செல்பி`யில் இணைந்தாரா காங்கிரஸ் திக்விஜய் சிங்?

பிரதமர் மோடி அறிமுகம் செய்த  `மகளுடன் செல்பி`யில் இணைந்தாரா காங்கிரஸ் திக்விஜய் சிங்?
பிரதமர் மோடி அறிமுகம் செய்த `மகளுடன் செல்பி`யில் இணைந்தாரா காங்கிரஸ் திக்விஜய் சிங்?

புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடி அறிவித்து நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள Selfie With Daughter என்ற மகளுடன் செல்பி பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்கும் இணைந்துவிட்டாரா என்று பரபரப்பு எழுந்துள்ளது.

பிரதமர் மோடி அறிமுகம் செய்த  `மகளுடன் செல்பி`யில் இணைந்தாரா காங்கிரஸ் திக்விஜய் சிங்?

மகளுடன் செல்பி என்பது குறித்த செய்தியை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டிருந்தது. அந்த செய்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் அவரது தோழியும் பிரபல பத்திரிகையாளருமான அமிர்தாவும் நெருக்கமாக இருப்பது போன்ற நிழற்படத்தையும்  தவறுதலாக வெளியிட் டுள்ளது.

இந்தப் புகைப்படம் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமிர்தாவுடனான தனது தனிப்பட்ட உறவை ஒப்புக்கொண்ட திக்விஜய் சிங், விரைவில் தாங்கள் திருமணம் செய்துகொள்ள  போவதாகவும் அப்போது தெரிவித்து இருந்தார்.

அண்மையில் இந்தியாவில் ஆண், பெண் விகிதாச்சாரம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பெண் குழந்தைகளின்  முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தங்கள் மகளுடன் எடுத்த போட்டோவை ட்விட்டரில் ‘செல்பி வித் டாட்டர்’ என்ற ஹேஷ்டேக்கில் பகிரும்படி பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதன்படி, ஒருவர் திக்விஜய் சிங் மற்றும் அமிர்தாவின் நிழற்படத்தை ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் ‘ஓகே, டிக்கிராஜா செல்பி வித் டாட்டர் என்பதை செல்பி வித் மகள் வயதில் உள்ள கேர்ள் பிரண்ட் என தவறாகப் புரிந்துகொண்டார்’ என பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த விமர்சனத்தை அந்தப் பத்திரிகை கவனிக்காமல், உண்மையான  மகள்களுடன் அப்பாக்கள்  எடுத்துக் கொண்ட பல்வேறு செல்பி புகைப்படங்களுடன் திக்விஜய் சிங், அமிர்தா புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. அத்துடன் பெண் குழந்தைக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி முயற்சி எடுத்து வருவது குறித்து விரிவான கட்டுரையையும் வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் இதழின் இந்த கவனக்குறைவு குறித்து திக்விஜய் சிங்கும், அமிர்தாவும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.