Published:Updated:

கண்டுகொள்ளப்படாத கடிதம்; அரசு அலட்சியத்தால் விஷம் குடித்து ஊழியர் தற்கொலை

கண்டுகொள்ளப்படாத கடிதம்; அரசு அலட்சியத்தால் விஷம் குடித்து ஊழியர் தற்கொலை
கண்டுகொள்ளப்படாத கடிதம்; அரசு அலட்சியத்தால் விஷம் குடித்து ஊழியர் தற்கொலை
கண்டுகொள்ளப்படாத கடிதம்; அரசு அலட்சியத்தால் விஷம் குடித்து ஊழியர் தற்கொலை

கோவை : கோவையில் விமான நிலைய விரிவாக்கம் செய்ய தன்னுடைய நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்லூரி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வேன் என அனைத்து துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் அதை யாரும் கண்டுகொள்ளாததால் இந்த தற்கொலை நடந்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, இதற்காக சின்னியம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சின்னியம்பாளையம் பகுதியில் இடத்தை கையகப்படுத்தும் முயற்சியை அரசு தீவிரப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கோவை, சின்னியம்பாளையம், ஜி.கே.ஆர். நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற தனியார் கல்லூரி ஊழியர், மாவட்ட ஆட்சியருக்கு 'தன்னுடைய நிலத்தை ஒப்படைக்க தான் விரும்பவில்லை என்றும், எனவே இந்த திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றும் கோரி இருந்தார். பல ஆண்டு கஷ்டப்பட்டு சம்பாதித்த தொகையோடு, கடன் வாங்கி இந்த வீட்டை தான் கட்டியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சதீஷ், இதையும் மீறி நிலம் கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் எச்சரித்திருந்தார்.

கண்டுகொள்ளப்படாத கடிதம்; அரசு அலட்சியத்தால் விஷம் குடித்து ஊழியர் தற்கொலை

இந்த கடிதத்தின் நகல் அனைத்து துறையினருக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த மனு மீது அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் சதீஷ் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று சதீஷின் உடல் அவரது வீட்டின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டது. விஷம் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் அரசு துறைகளுக்கு சதீஷ் எழுதிய கடிதம் விவரம் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய பின்னர் அதனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியன் விளைவாகத்தான் இந்த தற்கொலை நடந்துள்ளது. அரசு இதில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த தற்கொலையை தடுத்திருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ச.ஜெ.ரவி