Published:Updated:

'நாதியற்ற மொழியா தமிழ் மொழி!'

'நாதியற்ற மொழியா தமிழ் மொழி!'

'நாதியற்ற மொழியா தமிழ் மொழி!'

'நாதியற்ற மொழியா தமிழ் மொழி!'

'நாதியற்ற மொழியா தமிழ் மொழி!'

Published:Updated:
'நாதியற்ற மொழியா தமிழ் மொழி!'

திருச்சி: தமிழ் மொழியை காக்க எந்த கட்சியும் குரல் கொடுக்கவில்லை. நாதியற்ற மொழியா தமிழ்மொழி என தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் திருச்சியில் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ''இந்தித் திணிப்பிற்கு எதிராக 1965ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மொழிப்போர் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 1938ல் தொடங்கிய இந்தித் திணிப்பிற்கு எதிரான முதல் போராட்டம் 1965-ம் ஆண்டு தீவிரமடைந்தது.  தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக   பயன்படுத்தப்படும் என்ற அரசமைப்புச் சட்ட விதி 343ஐ எதிர்த்து மொழிப்போராட்டம் தீவிரமடைந்தது. அந்த வருடம் ஜனவரி 25  முதல் மார்ச் 15 வரை 50 நாள் மாணவர்களும், மக்களும் சேர்ந்து நடத்திய தமிழ்த் தேசிய போராட்டம், நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது. இந்த போராட்டத்தை ஒடுக்க இந்திய அரசு ராணுவத்தை அனுப்பி மாணவர்களையும், மக்களையும் சுட்டுக் கொன்றது. 300 பேர்க்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். 10 பேர் தீக்குளித்தும், நஞ்சுண்டும் இறந்தார்கள். தாய்மொமியை காக்க இவ்வளவு பெரிய போராட்டம் உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்ததில்லை.

'நாதியற்ற மொழியா தமிழ் மொழி!'

இந்நிலையில், 1963ல் இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் செயல்பட வேண்டிய அலுவல் மொழிச் சட்டம் இயற்றப்பட்டது. அதில் 1976ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த திருத்தச் சட்டத்தின்படி தமிழகம் நீங்களாக மற்ற மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால், அந்த சட்டத்தை இப்போது இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதில்லை என்பதுதான் கொடுமை.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அரசுக் கல்லூரிகள் என 1ஆம் வகுப்பு முதல் அனைத்திலும் ஆங்கிலம் பயிற்று மொழியாகவே உள்ளது. தற்போது தமிழ் பயிற்று மொழியாக இல்லை. பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய மொழிப் பாடமாக உள்ளது. ஆனால், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப் பள்ளிகளில் தமிழ் ஒரு மொழிப்பாடமாக இருக்க வேண்டியதில்லை. அங்கு இந்தி கட்டாய மொழிப்பாடம். தமிழக  அரசு மறைமுகமாக கல்வியில் ஆங்கிலத்தைத் திணிக்கிறது, இந்திய அரசு இந்தியைத் திணிக்கிறது. இவற்றை இங்குள்ள கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை.

மொழிப்போரை நடத்தி ஆட்சியைப் பிடித்த தி.மு.க., அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சி ஆட்சிகள் ஆங்கிலத் திணிப்பைத் தீவிரப்படுத்தின. இந்தித் திணிப்பை இந்த கட்சிகளும் எதிர்க்கவில்லை. இந்த திராவிட இயக்கங்களே ஆங்கில ஆதிக்கத்திற்கும், இந்தித் திணிப்புக்கும் கதவு திறந்துவிடும் கங்காணி வேலை பார்த்தது.

தாய்மொழி வழிக் கல்விதான் மாணவர்களின் அறிவை வளர்க்கும் என உலகம் முழுவதும் உள்ள கல்வி உளவியல் அறிஞர்களின் கருத்து.  வளர்ச்சியடைந்த, வளர்ச்சி அடையாத அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் அனைத்திலும் தாய்மொழி வழிக் கல்விதான்  இருக்கிறது. தமிழகத்தில் உள்ள  தி.மு.க., அ.தி.மு.க.  கட்சிகள் திராவிட இனத்தை முதன்மைப்படுத்தின. அதனால், அவற்றிற்குத் தமிழைக் காக்கும் அக்கறையில்லை. தமிழ் வழிக் கல்வி பயில்வோர்க்குரிய வேலைவாய்ப்பை உறுதி செய்ய இந்த கட்சிகள் தவறிவிட்டன.

இந்திய அரசு ஒரு பக்கம் சட்டத்தைப் போட்டு விட்டு, மறுபக்கம் தமிழ் நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது. தமிழ்த் தேசியப் பேரியக்கம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட, அதிகாரிகளிடம் அலுவல் மொழிச் சட்டத்திருத்த  நகலையும் இணைத்து விண்ணப்பம் கொடுத்துள்ளோம். தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் தஞ்சை வந்திருந்த நாடாளுமன்றக் குழுவினரிடமும் மனுக்கொடுத்துள்ளோம். இதுவரை, எந்த நடவடிக்கையும் இல்லை. மொழியை காக்க எந்த கட்சியும் குரல் கொடுக்கவில்லை. நாதியற்ற மொழியா தமிழ்மொழி'' என்றவர்.

வருகின்ற 25ஆம் தேதி தமிழ்த் தேசியப் பேரியக்கம் இதே கோரிக்கைகளை முன்வைத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், திருச்சி தலைமை அஞ்சலகத்தையும், தருமபுரி  தொலைத் தொடர்பு அலுவலகத்தையும் முற்றுகையிட உள்ளோம். அந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள எங்கள் தோழமை கட்சிகளிடம் ஆதரவு கேட்போம்'' என்றார்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்