Published:Updated:

பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது: ஐ.ஓ.சி. ஆறுதல்!

பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது: ஐ.ஓ.சி. ஆறுதல்!
பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது: ஐ.ஓ.சி. ஆறுதல்!

பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது: ஐ.ஓ.சி. ஆறுதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது: ஐ.ஓ.சி. ஆறுதல்!

சென்னை: கியாஸ் சிலிண்டரை போனில் பதிவு செய்யும் போது பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, வசதி படைத்தவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தால், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் பரம ஏழைகளுக்கு இந்த மானியம் பயன்படுத்தப்படும் என்று  வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, இந்தியாவில் பலர் சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் வேண்டாம் என்று பதிவு செய்து வருகின்றனர்.

தானியங்கி பதிவு (புக்கிங்) சேவையை போனில் நாம் தொடர்பு கொண்டு கியாஸ் சிலிண்டரை பதிவு செய்யும் வசதி பெரும்பாலான நகர்புறங்களில் உள்ளது. அதில் நாம் தொடர்பு கொண்டால் நம்முடைய செல்போன் அல்லது தரைவழி எண்ணை பதிவு செய்திருந்தால் நம்முடைய ஏஜென்சி எண்ணை அது தெரிவிக்கும். அதன் பின்னர் 'எல்.பி.ஜி. மானியத்தை விட்டு கொடுத்து ஏழை மக்களின் வீட்டில் அடுப்பு எரிய உதவிடுங்கள்' என்ற தகவலை கூறும். அதைத் தொடர்ந்து எல்.பி.ஜி. மானியத்தை இப்போதே விட்டுக்கொடுக்க நீங்கள் நினைத்தால் பூஜ்ஜியத்தை (0) அழுத்தவும் அல்லது சிலிண்டரை 'புக்கிங்' செய்ய வேண்டும் என்றால் எண் '1'ஐ எழுத்தவும் என்று குறிப்பிடும்.

வாடிக்கையாளர்கள் தெரியாமல் பூஜ்ஜியத்தை அழுத்திவிட்டால், மானியம் ரத்தாகிவிடும் என்ற தகவல் அனைவரிடத்திலும் பரவி வருகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய ஆயில் நிறுவன அதிகாரிகள் கியாஸ் சிலிண்டரை போனில் பதிவு செய்யும்போது பூஜ்ஜியத்தை அழுத்தினால் உடனே மானியம் ரத்தாகாது என்றும், வாடிக்கையாளர்கள் இதில் குழப்பம் அடைய வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் தலைமை தொடர்பு மேலாளர் சபீதா நடராஜ் கூறும்போது, ''ஏற்கனவே சமையல் கியாஸ் இணைப்பு பெற்று சிலிண்டர் வாங்கி வருபவர்கள், சிலிண்டர் காலியானதும் மீண்டும் சிலிண்டர் பெறுவதற்கு செல்போன் மற்றும் தரைவழி போன் மூலம் தானியங்கி பதிவு சேவையை தொடர்பு கொண்டு பதிவு செய்யும் முறை இருந்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, சிலிண்டர் மானியம் வேண்டாம் என்பதை உறுதி செய்ய எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் பலர் பதிவு செய்து வருகிறார்கள். மேலும், மானியம் வேண்டாம் என்பதை எளிய முறையில் கொண்டு வர வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சமையல் கியாஸ் சிலிண்டரை 'பதிவு' செய்யும் போதே மானியம் வேண்டாம் என்பதை வாடிக்கையாளர்கள் தெரிவிப்பதற்கு வசதியாக 'கம்ப்யூட்டர் குரல்' ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அதில், சிலிண்டர் மானியம் வேண்டாம் என்றால் பூஜ்ஜியத்தை அழுத்துக்கள் என்ற தகவல் வரும். ஆனால், இதை பலர் தவறாக புரிந்திருக்கிறார்கள். பூஜ்ஜியத்தை அழுத்தினால் மட்டும் மானியம் ரத்தாகி விடாது. பூஜ்ஜியத்தை அழுத்திய பிறகு, மீண்டும் ஒரு முறை மானியம் வேண்டாம் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்றால் 7ஆம் எண்ணை அழுத்துங்கள் என்று கூறும். அப்போது கூட மானியம் ரத்தாகாது. இது வெறும் வேண்டுகோளாக தான் ஏற்றுக்கொள்ளப்படும்.

வாடிக்கையாளர்கள் தெரியாமல் அழுத்திவிட்டால் கூட ஒன்றும் தவறில்லை. கியாஸ் ஏஜென்சியில் இருந்து தொடர்பு கொண்டு நம்மிடம் விவரம் கேட்பார்கள். அவர்களிடம் விளக்கம் சொல்லி தொடர்ந்து மானியத்தை பெறலாம். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தும் நிவாரணம் பெறலாம். அவர்கள் அந்த வேண்டுகோளை நிராகரித்து விடுவார்கள். எனவே, வாடிக்கையாளர்கள் இதுகுறித்து அச்சம் அடைய தேவையில்லை. குழப்பமும் அடைய வேண்டாம்'' என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு