Published:Updated:

தமிழகத்தில் மதுவிற்பனை: நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு!

தமிழகத்தில் மதுவிற்பனை: நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு!
தமிழகத்தில் மதுவிற்பனை: நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு!

தமிழகத்தில் மதுவிற்பனை: நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் மதுவிற்பனை: நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு!

கோவை: மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, கோவை நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்பட14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில், அரசே மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்வது என்பது சரியல்ல என்றும், டாஸ்மாக் மதுவிற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பொது நல வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
ஆனால் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி,   மதுவிற்பனைக்கு தடைவிதிக்க  நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்நிலையில், டாஸ்மாக் மதுவிற்பனை என்பது இந்திய தண்டனைச் சட்டம் 328 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும், டாஸ்மாக் மதுவிற்பனை சார்ந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தி கோவை நீதிமன்றத்தில் கோவை, போத்தனூரைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக அமைச்சரும், டாஸ்மாக் நிறுவனத்தலைவருமான நத்தம் விஸ்வநாதன், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் (பொறுப்பு) மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், யுனைடெட் ஸ்பிரிட், மிடாஸ் கோல்டன் டிஸ்டிரிப்யூசன், எலைட் டிஸ்டில்லர்ஸ் உள்ளிட்ட மது பான தயாரிப்பாளர்கள் 14 பேர் இந்த வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த மனுவில், "போதையை ஏற்படுத்தி, உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தே மதுவை விற்பது என்பது இந்திய தண்டனைச் சட்டம் 328ன் பிரிவின் கீழ் குற்றம் என சட்டம் சொல்கிறது. எனவே உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் " எனக்  கூறப்பட்டுள்ளது. கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்- 7ல் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஹேமந்த் குமார்,  வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "இந்திய தண்டனைச்சட்டம் 328 ன் கீழ் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் மதுவை விற்பது குற்றம் எனக்கோரி, ரபீக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பின்னர்தான் இது குற்றமா என்பது தெரியவரும். விசாரணையில் குற்றம் என்பதை நீதிபதி உறுதி செய்தால், டாஸ்மாக் நிறுவன தலைவர் முதல் விற்பனையாளர் வரை அனைவருக்கும் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க கூடும்.

இதற்காக இவர்கள் அனைவர் மீதும் ஜாமீன் இல்லாத சட்டப்பிரிவில் வழக்கு தொடரப்படும். ஒருவேளை எங்கள் மனு தகுதியின் அடிப்படையில்  முடிவு செய்யப்படவில்லை என்றால், மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். அங்கும் நிராகரிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்" என்றார்.

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனச்சொல்லி மதுவிற்பனையை தடை செய்யக்  கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மது விற்பது குற்றம் எனசொல்லி மதுவிற்பனைக்கு  தடைக்கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ச.ஜெ.ரவி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு