Published:Updated:

கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் போரூர் ஏரி!

கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் போரூர் ஏரி!
கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் போரூர் ஏரி!

கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் போரூர் ஏரி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை தீர்த்து வைக்கும் முக்கிய ஆதாரமாய் போரூர் ஏரி விளங்கி வருகிறது. 820 ஏக்கரில் பரந்து விரிந்திருந்த போரூர் ஏரி, தற்போது பல்வேறு ஆக்கிரமிப்புகளால் 300 ஏக்கராக குறைந்துள்ளது.

கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் போரூர் ஏரி!

சமீபத்தில் போரூர் ஏரியின் நடுவே மணல் கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததை அடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களும் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோடைக்காலம் முடிந்து மழையால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் மணலை கொட்டி அதன் எல்லையை குறைப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் போரூர் ஏரி!

'ஏரியின் கரைகளை சீரமைக்கிறோம், பூங்கா அமைக்க போகிறோம்' என்ற போர்வையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியை குறைத்து, அந்த இடத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஏரியில் மண்ணை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணி துறைக்கு உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக வரும் 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் போரூர் ஏரி!

மேலும், ஏரியின் நீர் வறண்டு போயிருக்கும் பகுதிகளில் பொக்லைன், லாரிகளை பயன்படுத்தி மணல் அள்ளும் வேலையில் சிலர் ஈடுபட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏரியின் சுற்றுப்புற கரைகளில் வேலி அமைத்திருந்தாலும் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டும் போக்கு, நீர்நிலையில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.

கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் போரூர் ஏரி!

நீர்நிலைகளை காக்க பல்வேறு நாடுகளும் கடுமையான சட்டங்களை உருவாக்கி வரும் நிலையில், இயற்கையான சூழலில் மக்களின்  நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளை ஒரு சிலரின் சுயநலத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரும் நிலை கவலைக்குரிய ஒன்றாகும்..!
        
-க. பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு