Published:Updated:

போலீஸ்காரர் மகனுக்காக வாங்கிய கிரிக்கெட் பேட்டால், பணிமாற்றத்துக்குள்ளான இன்ஸ்பெக்டர்!

Vikatan Correspondent
 போலீஸ்காரர் மகனுக்காக வாங்கிய கிரிக்கெட் பேட்டால், பணிமாற்றத்துக்குள்ளான இன்ஸ்பெக்டர்!
போலீஸ்காரர் மகனுக்காக வாங்கிய கிரிக்கெட் பேட்டால், பணிமாற்றத்துக்குள்ளான இன்ஸ்பெக்டர்!

கிரிக்கெட் கிட்டத்தட்ட இந்தியர்களின் ரத்தத்தோடு கலந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சும்மா இருந்தா கிரிக்கெட், பொழுது போகவில்லை என்றால் கிரிக்கெட் என்ற எண்ணம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரான அமுதா செல்விக்கு பிரச்னையை ஏற்படுத்தி விட்டது.

 போலீஸ்காரர் மகனுக்காக வாங்கிய கிரிக்கெட் பேட்டால், பணிமாற்றத்துக்குள்ளான இன்ஸ்பெக்டர்!

ரமேஸ்வரத்தில் இரவு நேரத்தில் சக போலீஸ்காரர்களுடன் அவர்  கிரிக்கெட் விளையாட, தற்போது அது பணியிடை மாற்றம் வரை சென்றிருக்கிறது. தமிழில் ஒரு பழமொழி உண்டு. 'யானையை விட்டுடுவாங்க, பூனையை பிடிப்பாங்க' என்பதுதான் அது. போலீஸ்துறைக்கு இந்த பழமொழி ரொம்பவே பொருந்தும்.

போலீஸ் நிலையத்தில் விசாரணைக் கைதி சாவு போன்ற விவகாரங்களில் எல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் பொதுமக்கள் போராட்டங்களில் இறங்கினால்தான் நடக்கும். ஆனால், கிரிக்கெட் விளையாடிய விவகாரத்தில் அமுதா செல்வி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்?என்ற கேள்விதான் இங்கு எழுகிறது.

அப்படி ஒன்றும் அவர் பெரிய குற்றம்  செய்து விடவில்லையே என்ற எண்ணத்தைதான் உருவாக்குகிறது. எச்சரிக்கையுடன் விட்டுருக்கலாம் என்ற எண்ணமே சக போலீஸ்காரர்களிடமும், ராமேஸ்வரம் பொதுமக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. அமுதா செல்வி கிரிக்கெட் விளையாடியதாக சொல்லப்படும் இரவில், அவரது ஜீப் டிரைவர் தனது மகனுக்காக புதிய கிரிக்கெட் பேட் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.

 போலீஸ்காரர் மகனுக்காக வாங்கிய கிரிக்கெட் பேட்டால், பணிமாற்றத்துக்குள்ளான இன்ஸ்பெக்டர்!

அதனை பார்த்த அமுதா செல்வி, இது எவ்வளவு வரும் என்று கேட்டுள்ளார். அப்படியே பேச்சுவாக்கில் ''சரி பந்து போடு பார்ப்போம்''னு...! ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அப்படியே போலீஸ் நிலையம் அருகேவுள்ள விளக்கு வெளிச்சத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

இதனை பார்த்த யாரோ ஒருவர் செல்போனில் ரிக்கார்ட் செய்து வாட்ஸ் அப்பில் பரப்பியுள்ளார். அமுதா செல்வி யூனிபார்மில் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் பரவ, ராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகனம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அதோடு உடனடியாக அமுதாசெல்வியை ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்துள்ளார். மகனுக்கு கிரிக்கெட் பேட் வாங்கி வந்த அந்த டிரைவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எச்சரிக்கையுடன் விட்டுருக்கலாம் என்று சக போலீஸ்காரர்கள் சொல்கிறார்கள்.

டூட்டி நேரத்தில், அதுவும் யூனிபார்மில் கிரிக்கெட் விளையாடியதால்தான் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எப்படியே யானையை விட்டுடுங்க... பூனைய பிடிச்சுக்குங்க...!