Published:Updated:

அப்துல் கலாமிடம் கடைசியாக பாராட்டு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல் கலாமிடம் கடைசியாக பாராட்டு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள்!
அப்துல் கலாமிடம் கடைசியாக பாராட்டு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள்!

அப்துல் கலாமிடம் கடைசியாக பாராட்டு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சக மனிதர்களிடம் காட்டும் நேசம் அலாதியானது. தனது உதவியாளர் முதல் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் வசித்த போது அங்கிருந்த பாதுகாவலர்களிடமும் நேசத்தை பகிர்ந்த மகத்தான மனிதர் அவர். அதே வழியில்தான் தனது கடைசி காலக்கட்டம் வரை கலாம் வாழ்ந்து வந்தார்.

அப்துல் கலாமிடம் கடைசியாக பாராட்டு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள்!

சற்று கூட அதிர்ந்து பேசாத கலாம் ஷில்லாங் ஐ.ஐ.எம். விழாவிற்கு போன போது, அதிரடி படையை சேர்ந்த கான்ஸ்டபிள்  ஒருவர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அப்துல் கலாம் ஷில்லாங்கில் இருந்த வரை அந்த கான்ஸ்டபிள்தான் சிறப்பு பாதுகாப்பு வழங்கியுள்ளார். ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றுவதற்கு முன்,  தனக்கு அந்த நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்கிய அந்த காவலரையும் அழைத்து அப்துல் கலாம் பாராட்டியுள்ளார்.

இது குறித்து கிழக்கு காசி மலைப்பிரதேச எஸ்.பி. காக்ரங் கூறுகையில், "குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், அவருக்கு நாள் முழுவதும் பாதுகாப்பு அளித்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். அப்துல் கலாம் அழைக்கிறார் என்றதும் முதலில் அந்த காவலர் பயந்து போனார். பின்னர் பாராட்டிய போது  அந்த காவலர் மனமகிழ்ச்சியடைந்தார். கலாமின் சிறப்பே சிறிய விஷயங்களை கூட மனம் விட்டு பாராட்டுவதுதான்''  என்றார்.
 

ஷில்லாங் ஐ.ஐ.எம் நிறுவனத்துக்கு மாலை 5.40 மணிக்கு வந்த அவர், 7 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார். 7.45 மணியளவில் கலாம் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்துல் கலாமின்  மறைவையடுத்து இன்று மேகலாயா மாநிலத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு