Published:Updated:

அப்துல் கலாமின் பெயரை தவறாக பதிவிட்டு பின்னர் மாற்றிய அனுஷ்கா சர்மா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல் கலாமின் பெயரை தவறாக பதிவிட்டு பின்னர் மாற்றிய அனுஷ்கா சர்மா!
அப்துல் கலாமின் பெயரை தவறாக பதிவிட்டு பின்னர் மாற்றிய அனுஷ்கா சர்மா!

அப்துல் கலாமின் பெயரை தவறாக பதிவிட்டு பின்னர் மாற்றிய அனுஷ்கா சர்மா!

 நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதலியுமான நடிகை அனுஷ்கா சர்மா, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் மறைவுக்கு ட்விட்டரில் தவறாக பதிவிட்டு இந்திய மக்களின் கோபத்துக்குள்ளாகியுள்ளார். 
 

அப்துல் கலாமின் பெயரை தவறாக பதிவிட்டு பின்னர் மாற்றிய அனுஷ்கா சர்மா!

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவால் சமூக வலைதளங்கள் கூட சோகமயமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் எதிலெடுத்தாலும் அப்துல் கலாமின் நினைவுகளைதான் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த தருணத்தில் நடிகை அனுஷ்கா சர்மா, அப்துல்கலாமிற்கு இரங்கல் தெரிவித்து போட்ட ஒரு ட்வீட் ரசிகர்களைக் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் என்பதற்குப் பதிலாக அப்துல்கலாம் ஆசாத் எனப் பெயரை தவறுதலாக பதிவிட்டு விட்டார். இதனால் கோபத்தில் பொங்கிய ரசிகர்கள், "சமுதாயத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே இப்படி தவறாக பதிவிட்டால் எப்படி? " என ஆவேசமாகி விட்டனர்.

இதையடுத்து தவறை புரிந்து கொண்டு, அப்துல்கலாம் என்று மாற்றி ட்விட் செய்தார் அனுஷ்கா சர்மா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு