Published:Updated:

வேளாண் கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயர்: பீகார் அரசின் மரியாதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேளாண் கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயர்: பீகார்  அரசின் மரியாதை!
வேளாண் கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயர்: பீகார் அரசின் மரியாதை!

வேளாண் கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயர்: பீகார் அரசின் மரியாதை!

பாட்னா: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவைத் தொடர்ந்து,  அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், தங்கள் மாநிலத்தின் வேளாண் கல்லூரி ஒன்றுக்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வேளாண் கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயர்: பீகார்  அரசின் மரியாதை!

கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி செல்லும் முன் பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த நிதிஷ்," கிஷான்கஞ்ச் வேளாண் கல்லூரிக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலாம் எப்பொழுதுமே பீகாரின், குறிப்பாக கிராமப்புறங்களின் வளர்ச்சி குறித்து அக்கறை காண்பித்து வந்தார். பீகார் மாநிலம் கலாமுக்கு எப்போதுமே நெருக்கமானது. பீகாரும், பீகார் மாநில மக்களும் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

கலாமின் மறைவையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பீகார் மாநிலத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு