Published:Updated:

மதங்களை கடந்த மந்திர மனிதர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மதங்களை கடந்த மந்திர மனிதர்!
மதங்களை கடந்த மந்திர மனிதர்!

மதங்களை கடந்த மந்திர மனிதர்!

ப்துல் கலாம் சிறுவனாய் ராமேஸ்வரம் அரசுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, தினமும் பள்ளி வாசலில் தொழுகையை முடித்துவிட்டு, பக்கத்தில் உள்ள கோவிலின் அருகே சிறிது நேரம் நின்று கொண்டிருப்பார். காண்பவர்கள், 'இந்த இஸ்லாமியச் சிறுவனுக்கு இங்கு என்ன வேலை?' என வித்தியாசமாக பார்ப்பார்கள்.

அவர் தினமும் அங்கு நிற்பதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று ஆலயங்களில் இருந்து வெளிவரும் ரம்மியமான மந்திர ஒலியை கேட்பது கலாமுக்கு மிகப்பிடிக்கும். இரண்டாவது அக்கோவிலின் தலைமை குருக்கள், அவரது நண்பர் ராமானந்த சாஸ்திரியின் தந்தை. ராமானந்த சாஸ்திரியும், கலாமும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரே வரிசையில் அருகருகே அமர்ந்திருக்கும் அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடு, ராமானந்த சாஸ்திரி பூணூல் அணிந்திருப்பார்; கலாம் வெள்ளைக் குல்லா அணிந்திருப்பார் என்ற அளவிலேயே இருந்தது.

மதங்களை கடந்த மந்திர மனிதர்!

ஒரு நாள் கலாமின் வகுப்பிற்கு ஒரு புதிய ஆசிரியர் வருகிறார். அவர் கையில் பிரம்பை வைத்துக் கொண்டு வகுப்பை சுற்றி வருவதைப்பார்க்கும்போது, 'இவர் கண்டிப்பானவர்...!' என்று கலாம் நினைத்துக் கொள்கிறார். அவர் திடீரென்று, "ஏய்! வெள்ளை குல்லா அணிந்த சிறுவனே... நீ இந்த ஊர் தலைமை குருக்களின் மகன் அருகில்தான் அமர்ந்திருப்பாயா... எழுந்து பின்னால் போ!" என்று அப்துல் கலாமையும், ராமானந்த சாஸ்திரியையும் பிரித்து தனித்தனியே உட்கார வைக்கிறார். அப்துல் கலாம், இனி தன் நண்பனுடன் அதிகமாக பேச முடியாதே என சோகத்தில் அழுது கொண்டே வீட்டிற்கு செல்கிறார்.

அவரது தந்தையிடம் நடந்ததை சொல்கிறார். ராமானந்த சாஸ்திரியும் அவரது தந்தையிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார். ராமானந்த சாஸ்திரியின் தந்தை கலாமையும், அவரது ஆசிரியரையும் வரவைத்து, 'சிறுவர்களிடம் வேற்றுமையை விதைக்காதீர்கள். ஒற்றுமையாய் இருக்க கற்றுக் கொடுங்கள்' என்று ஆசிரியரை கடுமையாக கண்டித்திருக்கிறார். தன் தவற்றை உணர்ந்த ஆசிரியர், அங்கு நின்று கொண்டிருந்த கலாமை கட்டி அணைத்து 'இன்று நான் ஒரு புதிய பாடம் கற்றுக் கொண்டேன். அது மனிதநேயம் என்னும் பாடம். என்னை மன்னித்து விடு' என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார்

இன்னொரு நிகழ்வு,  பின்னாளில் கலாம் இந்தியாவின் குடியரசு தலைவராக இருக்கும் போது நிகழ்ந்தது. ஒரு விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த கலாம்,  ''நான் ஒரு இஸ்லாமியன். மெழுகுவர்த்தி எனும் கிறிஸ்தவத்தைக் குறிக்கும் பொருளைக் கொண்டு இந்துக்களின் முக்கிய வழிபாட்டுப் பொருளான குத்துவிளக்கை ஏற்றியிருக்கிறேன். இது போல இந்தியர்கள் நாம் அனைவரும் மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழவேண்டும்'' என்று சமயோசிதமாக பேசினார்.

இன்று கலாமின் மறைவு, எல்லா மதத்தினரையும் வருந்த வைத்திருக்கிறது. கலாம் என்ற மந்திரச் சொல் மதங்களை கடந்தது என்பது மட்டும் எக்காலத்திற்கும் உண்மையாகவே இருக்கும்.

பா.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு