Published:Updated:

கலாமின் ஒரே வாழ்நாள் வருத்தம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கலாமின் ஒரே வாழ்நாள் வருத்தம்!
கலாமின் ஒரே வாழ்நாள் வருத்தம்!

கலாமின் ஒரே வாழ்நாள் வருத்தம்!

புதுடெல்லி: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்,  ஒரே ஒரு வருத்தத்தை வாழ் நாள் முழுவதும் கொண்டிருந்ததாக அவரது உதவியாளர் ஶ்ரீஜன் பால் சிங் தெரிவித்துள்ளார்.

கலாமின் ஒரே வாழ்நாள் வருத்தம்!

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கலாமுக்கு தனது வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு  வருத்தம் உண்டு. அது,  'தனது பெற்றோருக்கு அவர்களது வாழ்நாளில் 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்க செய்யும் வகையிலான வசதியை செய்து கொடுக்க முடியவில்லையே...!'  என்பதுதான்.

இதனை அவர் அவ்வப்போது என்னிடம் மிகுந்த வருத்தமுடன் பகிர்ந்து கொள்வார். அநேகமாக கலாம் தனது வாழ்க்கையில் கொண்டிருந்த ஒரே வருத்தம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

ஶ்ரீஜன் பால் சிங், கலாமுடன் சேர்ந்து இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில் கலாம் காலமானதை தொடர்ந்து, ஶ்ரீஜன் பால் சிங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கலாமின் கடைசி ஆசை என்னவாக இருந்தது? என்ற கேள்விக்கு, " கோடிக்கணக்கான நாட்டு மக்களின் முகங்களில் கோடிக்கணக்கான புன்னகைகளை பார்க்கவே அவர் விரும்பினார்.
மேலும் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையவும், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதிலும் அவர் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்" என தெரிவித்தார்.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு