Published:Updated:

அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட காபி ஷாப் திறப்பு விழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட காபி ஷாப் திறப்பு விழா!
அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட காபி ஷாப் திறப்பு விழா!

அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட காபி ஷாப் திறப்பு விழா!

லியும் பூனையுமாக இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்,  தேர்தல் காலம் நெருங்கிவிட்டால் சந்தித்து கொண்டு நட்பு பாராட்டுவார்கள்.  கூட்டணிக்கான அச்சாரமாக கூட மாறிவிடும் அந்த சந்திப்பு. அதேபோல் தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில், கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்தது.

அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட காபி ஷாப் திறப்பு விழா!

தஞ்சாவூர் தெற்கு வீதியில், ஐங்கரன் காபி ஷாப் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., பா.ஜ.க., தே.மு.தி.க. என அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகளும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டனர். அது மட்டுமில்லாமல் கடை உரிமையாளர்களில் ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். கடை திறப்பு விழாவுக்கு த.மா.க., பா.ஜ.க., தே.மு.தி.க. என கட்சி பாகுபாடு இல்லாமல் நகர் முழுவதும் போஸ்டர் அடித்தும் ஒட்டியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட காபி ஷாப் திறப்பு விழா!

இது குறித்து அரசியல் மட்டத்தில் சிலரிடம் பேசினோம்.

''அரசியல் நாகரிகம் என்பது அந்த காலத்தில் தேர்தல் நேரத்தில் கூட பாதுகாக்கப்பட்டது. ஆனால், அது இப்போது சுத்தமாக இல்லை. ஒரு கட்சி தலைவர் எப்படி இருக்கிறாரோ அதே போல்தான் அந்த தொண்டனும் இருப்பான். தேர்தல் வந்து விட்டால் முகம் சுளிக்கும் அளவுக்கு அரசியல் நாகரிகம் பார்க்காமல் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலில் நின்று பெறும் வெற்றியை  பெற்றது. எல்லாம் சில காலம்தான். ஆட்சி பொறுப்புக்கு வந்து சில மாதங்களிலேயே இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று கடுமையாக வார்த்தைகளால் தாக்கி கொண்டனர்.

அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட காபி ஷாப் திறப்பு விழா!

அதிலும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த், சட்டமன்றம் என்று கூட பார்காமல் நாக்கை துருத்தி பேசி வரலாற்று பிழையை செய்தார். அ.தி.மு.க.வினர் இவரை குடிகாரர் என்று விமர்சனம் செய்தனர். காபி கடை திறப்பு விழாவோ, கட்சி விழாவோ, தேர்தல் கூட்டணிக்காக மட்டும் இல்லாமல் இது எப்போதும் தொடர வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் அரசியல் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் '' என்றனர்.

பா.ஜ.க. நிர்வாகியான காபி ஷாப் உரிமையாளர் பாலமுரளியிடம் பேசினோம்.

''தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நான் எல்லா கட்சிகளையும் திறப்பு விழாவுக்கு அழைத்தேன். அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அது மட்டுமல்லாமல் பா.ஜ.க.வைச் சேர்ந்த எனக்கு தே.மு.தி.க. நிர்வாகி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

சமீபத்தில் இறந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த குடிசை மாற்று வாரிய தலைவர் கு.தங்கமுத்துவுக்கு, தி.மு.க. உட்பட அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டனர். இது நல்ல மாற்றதிற்கான ஆரம்பம். அதே போல்தான் என் கடை திறப்பு விழாவுக்கும் வந்துள்ளனர். மற்றபடி தேர்தல் கூட்டணிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை'' என்றார்.

கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு