Published:Updated:

நள்ளிரவு பார்ட்டிக்கு மனைவி செல்வது தவறில்லை: விவாகரத்து கேட்ட கணவனின் மனு தள்ளுபடி!

நள்ளிரவு பார்ட்டிக்கு மனைவி செல்வது தவறில்லை: விவாகரத்து கேட்ட கணவனின் மனு தள்ளுபடி!
நள்ளிரவு பார்ட்டிக்கு மனைவி செல்வது தவறில்லை: விவாகரத்து கேட்ட கணவனின் மனு தள்ளுபடி!

நள்ளிரவு பார்ட்டிக்கு மனைவி செல்வது தவறில்லை: விவாகரத்து கேட்ட கணவனின் மனு தள்ளுபடி!

நள்ளிரவு பார்ட்டிக்கு மனைவி செல்வது தவறில்லை: விவாகரத்து கேட்ட கணவனின் மனு தள்ளுபடி!

மும்பை: இன்றைய சமுதாயத்தில் மனைவி நள்ளிரவு பார்ட்டிக்கு செல்வது கணவருக்கு மனரீதியிலான சித்ரவதை அல்ல என்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ள மும்பை நீதிமன்றம், விவாகரத்து கேட்ட கணவனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மும்பையை சேர்ந்த கப்பல் மாலுமி ரோகனுக்கும், நிஷாவுக்கும் (பெயர்கள் மாற்றம்) கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், தம்பதியர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு, ரோகன் கடந்த 2008ஆம் ஆண்டு, மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவில், "எனது மனைவி அடிக்கடி நள்ளிரவு விருந்துக்கு செல்கிறார். குடிபோதையில் வீடு திரும்புகிறார். சிறிய விஷயத்துக்கு கூட எறிந்து விழுந்து கோபப்படுகிறார். என்னிடம் அவமதிப்பாக நடந்து கொள்கிறார். எனவே அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவி நிஷாவிடம் இருந்து ரோகனுக்கு விவாகரத்து வழங்கி 2011ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நிஷா மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. இதை எதிர்த்து ரோகன், மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.எல்.தஹலியானி முன்னிலையில் நடந்தது. அப்போது, விசாரணைக்கு பின்னர் ரோகனின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி, இன்றைய சமுதாயத்தில், இதுபோன்ற விருந்துக்கு செல்வது ஓரளவுக்கு அனுமதிக்கத்தக்கதுதான். மாலுமி ரோகன் கூறுவதை போன்று அவரது மனைவி குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் மது குடித்து விட்டு வீடு திரும்பினார் என்பதற்கு ஆதாரம் இல்லை. சம்பந்தப்பட்ட மாலுமியும் இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். ஒரு தடவை பெண் தோழியை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அப்போது அந்த பெண் தோழியும் மதுபோதையில் இருந்திருக்கிறார்.

இந்த வழக்கை பொறுத்தவரை கணவன், மனைவி இருவருமே சாதாரணமான வாழ்க்கையை நடத்தவில்லை அல்லது தாராள போக்குடன் நடந்து கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. இருவருமே விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே இந்த வழக்கில் கணவரை மனைவி சித்ரவதை செய்கிறார் என்று கூறி ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. மேலும் கணவரை உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்துகிறார் என்றும் கூற முடியாது. எனவே குடும்பநல நீதிமன்றம் ரோகனுக்கு விவாகரத்து வழங்கி தவறு செய்து விட்டது. ரோகன் மனைவியின் மேல் முறையீட்டு மனு மீது அப்பீல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்று கூறினர்.

அடுத்த கட்டுரைக்கு