Published:Updated:

மதுவிலக்கு வந்தால் யாருக்கெல்லாம் நஷ்டம்?

மதுவிலக்கு வந்தால் யாருக்கெல்லாம் நஷ்டம்?
மதுவிலக்கு வந்தால் யாருக்கெல்லாம் நஷ்டம்?

மதுவிலக்கு வந்தால் யாருக்கெல்லாம் நஷ்டம்?

மதுவிலக்கு வந்தால் யாருக்கெல்லாம் நஷ்டம்?
டாஸ்மாக்கை மூடினால் ஆட்சியாளர்களின் பைகளில் கரன்ஸிகள் கொட்டாது என்பதால்தான் வருவாய் இழப்பு என காரணம் சொல்கிறார்கள். வருவாய் இழப்பு அரசுக்கு அல்ல. அரசியல்வாதிகளுக்குத்தான்.
11 மதுபான நிறுவனங்கள், 7 பீர் கம்பெனிகள், 1 ஒயின் கம்பெனி என 19 நிறுவனங்கள் டாஸ்மாக்குக்கு ‘சரக்கு’ சப்ளை செய்கின்றன. 2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகுதான் 4 மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் பின்புலத்துடன் இயங்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியாளர்களின் கரிசனப் பார்வை எப்போதும் உண்டு. அதில் இரண்டு திராவிடக் கட்சிகளும் சளைத்தவை இல்லை.
மதுவிலக்கு வந்தால் யாருக்கெல்லாம் நஷ்டம்?
எலைட் டிஸ்டில்லரீஸ், எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தி.மு.க ஆட்சியில் வளம் கொழித்தன. இப்போது மிடாஸுக்கு சுக்கிர திசை. இந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்குவதில் டாஸ்மாக் அதிகாரிகள் காட்டும் அக்கறையில் அவர்களின் பேங்க் பேலன்ஸ் எகிற ஆரம்பிக்கிறது. மதுபானத் தொழில் மிகப்பெரிய சந்தை என்பதால் அதிகாரிகள் மட்டத்தில் பணம் தண்ணீராய் பாய்கிறது.
குடிபிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளைத் தேடி டாஸ்மாக் கடைகளுக்குப் போனால் அது கிடைக்காது அல்லது எப்போதாவதுதான் கிடைக்கும். பிரபலமில்லாத பிராண்டுகள்தான் டாஸ்மாக்கில் இருக்கும். எந்த பிராண்டுகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது அதிகாரிகள் என்பதால், அவர்கள் காட்டில் கரன்ஸி மழை கொட்டுகிறது.
ஆஃப், ஃபுல் பாட்டில்கள் மட்டுமே சரளமாகக் கிடைக்கும். குவார்ட்டர் பாட்டிலில் வருவாய் குறைவு என்பதால் அதையும் ஸ்டாக் வைக்காமல் பார்த்துக்கொள்வதும் அதிகாரிகளின் ராஜ்ஜியத்தில் நடக்கும் விவகாரம். இப்படி பலரின் பாக்கெட்டுகளில் வலம் சேர்க்கும் டாஸ்மாக்கை மூடினால் மது ஆலைகளை மூடவேண்டியிருக்கும்.
அடுத்த கட்டுரைக்கு