Published:Updated:

கொட்டும் மழையில் சசிபெருமாள் மனைவி, மகள், மகன்கள் உண்ணாவிரதம்!

கொட்டும் மழையில் சசிபெருமாள் மனைவி, மகள், மகன்கள் உண்ணாவிரதம்!
கொட்டும் மழையில் சசிபெருமாள் மனைவி, மகள், மகன்கள் உண்ணாவிரதம்!

கொட்டும் மழையில் சசிபெருமாள் மனைவி, மகள், மகன்கள் உண்ணாவிரதம்!

சேலம்: கொட்டும் மழையில் சசிபெருமாளின் மனைவி மற்றும் மகன்கள், மகள் உண்ணாவிரதம் இருந்து வரும் சம்பவம் சேலம் மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கொட்டும் மழையில் சசிபெருமாள் மனைவி, மகள், மகன்கள் உண்ணாவிரதம்!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சசிபெருமாள் உடலை வாங்க ஆசாரிபள்ளம் சென்ற அவரது மனைவி மற்றும் மகன், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறிவிட்டனர். அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

இதனிடையே, சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இ.மேட்டுக்காடு கிராமத்தில் சசிபெருமாளின் மனைவி மகிலம், மகள் கவியரசி, மகன்கள் விவேக், நவநீதன் மற்றும் ஊர் மக்கள் கொட்டும் மழையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-வீ.கே.ரமேஷ்

படம்:
க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு