Published:Updated:

டிஆர் பாலுவின் உறவினர் சாராய ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்!

Vikatan Correspondent
டிஆர் பாலுவின் உறவினர் சாராய ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்!
டிஆர் பாலுவின் உறவினர் சாராய ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்!

திருவாரூர்: டி.ஆர்.பாலுவின் உறவினர் குமாரவேல் நடத்தி வரும் கோல்டன் வாட்ஸ் சாராய ஆலையை மூடக்கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ளது தேவன்குடி. இங்கு 2008ல் நிறுவப்பட்ட நிறுவனம்தான் கோல்டன் வாட்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம். இந்த சாராய ஆலையை முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, தனது உறவினரான குமாரவேல் பெயரில் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

டிஆர் பாலுவின் உறவினர் சாராய ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்!

இந்நிலையில், இந்த சாராய ஆலையை இழுத்து மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார், கலைந்து சொல்லுமாறு உத்தரவிட்டனர். ஆனால், சாராய ஆலையை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர். இதையடுத்து, போலீசார் சாராய ஆலைக்கு பாதுகாப்பு கொடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரையிடம் பேசினோம்.
''கோல்டன் வாட்ஸ் நிறுவனம் குமாரவேல் என்ற பெயரில் இயங்கி வருகிறது. குமாரவேல் என்பவர் டி.ஆர்.பாலூவின் நெருங்கிய உறவினர். கடந்த 3 வருடங்களில் கோல்டன் வாட்ஸ் நிறுவனத்திலிருந்து 1664 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்திருக்கிறார்கள். அதன் நிகர லாபம் 800 கோடியை தாண்டும். இதில் 50 விழுக்காட்டிற்கு மேல் லாபம் மட்டுமே சம்பாதித்திருக்கிறார்.

டிஆர் பாலுவின் உறவினர் சாராய ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்!

நாங்கள் முற்றுகை போராட்டம் அறிவித்த பிறகு, டி.ஆர்.பாலுவே நேரடியாக மன்னார்குடி நண்பர்களிடம் தொடர்புகொண்டு, போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என பேசியிருக்கிறார். தன்னுடைய பெயரில் சாராய ஆலை இல்லை என்று சொல்லும் டி.ஆர்.பாலு, எதற்கு போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொல்கிறார். அப்படியானால் அ.தி.மு.க. ஆட்சியில்  மது விற்பனை செய்வார்களா?  இது எங்கள் முதற்கட்ட போராட்டம்தான். தொடர்ந்து நாங்கள் போராடுவோம் மதுவிலக்கை அமுல்படுத்துவம் வரை'' என்றவர்,

டிஆர் பாலுவின் உறவினர் சாராய ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்!

''இப்பகுதியில் தினமும் எரிசாராய ஆலைக்காக எடுக்கப்படும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. பாட்டில் கழுவும் பேக்டரி இங்கு இருப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புறச்சூழ்நிலை மாசுப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2008ல் தி.மு.க. ஆட்சியின்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதனால் அப்பகுதியே பெரும் பாலைவனமாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

டி.ஆர்.பாலு டெல்டா மக்களுக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார். தேவன்குடியில் எரி சாராய ஆலை, வடசேரியில் கெமிக்கல் ஆலை அமைத்து அந்த ஊர் மக்களின் எதிர்ப்பை கடந்த தி.மு.க. ஆட்சியில் அடக்குமுறை கொண்டு அடக்கி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் அந்த நாளை கறுப்புநாள், துக்கநாளாக அனுசரித்து வருகிறார்கள். மீத்தேன் திட்டத்திற்கு ஆதரவு தந்து செயல்படுத்தி வருகிறார்'' என்றார்.

ஏ. ராம்

படங்கள்: க.சதீஷ்குமார்