Published:Updated:

சாலை விதிகளை கடைபிடிக்க சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

சாலை விதிகளை கடைபிடிக்க சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம்!
சாலை விதிகளை கடைபிடிக்க சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

சாலை விதிகளை கடைபிடிக்க சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி, சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சாலை விதிகளை கடைபிடிக்க சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

சாலை விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தியும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதையும், கார்களை ஓட்டிச் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை விளக்கியும் நூறு சிக்னல்களில் ‘விபத்தில்லா தேசம்’ என்கிற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. தோழன் எனும் அமைப்புடன் இணைந்து பல்வேறு சமூக அமைப்புகளும், மாணவர்களும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா சாலை, மத்திய கைலாஷ், அமைந்தகரை உள்ளிட்ட பல இடங்களிலுள்ள சிக்னல்களின் அருகே தலைக்கவசம் அணியாதவர்களிடமும், கார்களில் சீட் பெல்ட் அணியாதவர்களிடமும் அவற்றின் பாதுகாப்பினை விளக்கினர். ஹெல்மெட் அணிந்தும், ஸ்ட்ராப் போடாதவர்களிடம் ஸ்ட்ராப் போடுமாறும் அவர்கள் எடுத்துக் கூறினர். அமைந்தகரை “அண்ணா ஆர்ச்” சிக்னல் அருகில், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வூட்டிக் கொண்டிருந்த தோழன் மற்றும் ஷா ஷா அமைப்பினர், ''இன்றைக்கு நாங்கள் இந்த 'விபத்தில்லா தேசம்’ங்குற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கான முக்கியமான காரணம், நம் நாட்டில் விபத்துக்களால் ஏற்படக்கூடிய மரணங்கள்தான் அதிகமாக இருக்கிறது.

சாலை விதிகளை கடைபிடிக்க சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அந்த மரணங்களை குறைக்க முடியும். பொதுமக்கள், சட்டத்திற்காகதான் ஹெல்மெட் அணிகிறார்களே தவிர தங்களோட உயிரை காப்பாத்துறதுக்காக போடுவதில்லை. ஹெல்மெட் போட்டும் உயிரிழப்புகள் அதிகம் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் ஸ்ட்ராப் போடாமல் போவதுதான்" என்றனர்.

அதேபோல், கார்களை ஓட்டிச் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் போடவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்திய ஷாஷா அமைப்பின் ஒருங்கினைப்பாளர் பிரேம், ''மாணவர்கள் பலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால்தான் விபத்துக்கள் அதிகரிக்கிறது. அதனால், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இங்க பிரசாரம் செய்பவர்களில் பலர் மாணவர்கள்தான். மாணவர் சமுதாயம் மாற்றம் கண்டால், இந்த தேசமே மாற்றம் காணும். நம்பிக்கையோடு இந்த பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். மேலும், இந்த பிரசாரத்தை அப்துல் காலம் ஐயாவுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்" என்றார்.

சாலை விதிகளை கடைபிடிக்க சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

சாலை விதிமுறைகளை வாகன ஓட்டிகளிடம் விளக்கிக் கொண்டிருந்த அமைந்தகரை போக்குவரத்து ஆய்வாளர் சேகர், ''விழிப்புணர்வு எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்றால், காவல்துறையினர் மட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களும் இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும். பிரச்சாரங்களில் ஈடுபடுவதுடன் தங்கள் கடமை முடிவடைந்துவிட்டது என்று நினைக்காமல் அவர்களும் வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

வாகனங்களில் செல்லும் பலர், என்னை போன்ற காவலர்களை பார்த்தவுடன் ஹெல்மெட்டை எடுத்து அணிவது, ஸ்ட்ராப் போடுவதுமாகதான் இருக்கிறார்கள். ஏன் இன்னும் சிலர், நாங்கள் பிடித்ததும் ஹெல்மெட்டை ஏன் எடுத்து வைக்கவில்லை என்று தங்கள் மனைவியிடம் சத்தம் போடுகின்றனர். காவல்துறையினர், ஹெல்மெட் போடுங்க, சீட் பெல்ட் அணியுங்கள், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் என்று எச்சரிக்கதான் முடியும். பொதுமக்கள்தான் அதன் அவசியத்தை உணர வேண்டும். கல்லூரி மாணவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை இப்படி விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும்" என்றார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மாதிரியான பிரச்சாரம் சென்னையின் முக்கிய சிக்னல்களில் நடைபெற்று வரும் நிலையில், இம்முறை நூறு சிக்னல்களில் நடைபெற்றுள்ளது.

விக்னேஷ்
(மாணவ பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு