Published:Updated:

நான் மினி ஸ்கர்ட் அணிந்ததில் தவறு இல்லை... கொதித்த பெண் சாமியார் ராதே மா!

Vikatan Correspondent
நான் மினி ஸ்கர்ட் அணிந்ததில் தவறு இல்லை... கொதித்த பெண் சாமியார் ராதே மா!
நான் மினி ஸ்கர்ட் அணிந்ததில் தவறு இல்லை... கொதித்த பெண் சாமியார் ராதே மா!

மும்பை: நான் மினி ஸ்கர்ட் அணிந்ததில் எந்த தவறும் இல்லை என்று கொதித்தெழுந்து உள்ளார் பெண் சாமியார் ராதே மா.

நான் மினி ஸ்கர்ட் அணிந்ததில் தவறு இல்லை... கொதித்த பெண் சாமியார் ராதே மா!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மா. இவர் மீது வரதட்சணை கொடுமை, 6 பேரை தற்கொலை செய்யத் தூண்டியது உள்ளிட்டவற்றுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நான் மினி ஸ்கர்ட் அணிந்ததில் தவறு இல்லை... கொதித்த பெண் சாமியார் ராதே மா!

இந்நிலையில், அவர் சிவப்பு நிற மினி ஸ்கர்ட் (குட்டைப் பாவாடை) அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ''நான் பக்தர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது அவர்கள் மாடர்ன் உடையை என்னிடம் அளித்து அதை அணியுமாறு கேட்டுக் கொண்டனர்.

அதனால் அதை அணிந்தேன். நான் அணிந்த மாடர்ன் உடை ஒன்றும் ஆபாசமாக இல்லை. அதை அணிந்ததில் என்ன தவறு உள்ளது? சாதுக்களும், சாத்விகளும் (பெண் துறவிகள்) இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று உங்களுக்கு யார் சொன்னது?" என்று கொதிப்பாக கேள்வி எழுப்பினார்.