'ஸ்டார்ஸ் உங்களுடன்’ வினோ, சேட்டிலைட் சேவைக்கு 'குட் பை’ சொல்கிறார் என்று ஒரு எஸ்.எம்.எஸ்!

''என்ன ஆச்சு வினோ?'' என்று வீட்டுக் கதவைத் தட்டினால், ''வெல்கம்... அம்மா இஸ் இன் தி கிச்சன். ப்ளீஸ் வெய்ட்!'' என்று வரவேற்கிறான் ஒரு சிறுவன். அவன் வினோவின் ஆறு வயது மகன் ஹிருதை. தெற்றுப் பல் சிரிப்புடன், ''ஹாய்!'' என்று கை குலுக்குகிறார் 'அம்மா’ வினோ!

''உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரியும்... இவ்ளோ பெரிய பையனா?''

''நம்புங்கப்பா! எனக்கும் தீபக்குக்கும் ரொம்ப ஸ்மூத் காதல் கல்யாணம். அதைவிட செம ஸ்மூத் திருமண வாழ்க்கை. இப்போ எங்க செல்லம் ஹிருதை... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறார்!''

''காம்பியரிங்ல இருந்து 'வி.ஆர்.எஸ்’ வாங்குறீங்களாமே... என்ன ஆச்சு?''

''தீபக் வேலை பார்க்கிற கார் கம்பெனியில் அவரை ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தின் மேனேஜரா மாத்திட்டாங்க. அந்த கம்பெனி இருக்கிறது சீனாவின் சியாங்கில். அவ்வளவு தூரம் அவரைப் பிரிஞ்சு

எங்களால இருக்க முடியாதுன்னு இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கு 'குட் பை’ சொல்ல வேண்டியதா இருக்கு. கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, வேற வழி தெரியலை. அங்கே ஃபேஷன் டிஸைனிங் படிக்கலாம்னு ஐடியா!''

''இத்தனை வருஷ மீடியா அனுபவத்தில் மறக்க முடியாத அனுபவம் என்ன?''

'' 'ஸ்டார்ஸ் உங்களுடன்’ நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி என்பதால், ஒரு புரொகிராம்கூட என்னால மிஸ் பண்ண முடியாது. ஒருநாள், நிகழ்ச்சி ஆரம்பிக்க அரை மணி நேரம் முன்னாடி என் அப்பா இறந்துட்டதாத் தகவல் வந்தது. ஆனா, எனக்குப் பதிலா சென்சிபிள் காம்பியரிங் பண்ண அப்போ யாரும் இல்லை. அதனால, யார்கிட்டயும் தகவல் சொல்லாம அழுகையை மறைச்சுட்டு, நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்க ஆரம்பிச்சேன். அன்னிக்கு 'ஈரம்’ படம் ஸ்பெஷல்... படத்தின் ஹீரோ ஆதிதான் சிறப்பு விருந்தினர். இறந்து போன என் அப்பா பேரும் ஆதி!

லைன்ல வந்த எல்லோரும் 'ஆதிகிட்ட பேசணும்’, 'ஆதி நல்லா இருக்காரா’ன்னு என்கிட்ட கேட்டப்பலாம் அப்பாதான் ஞாபகத்துல வந்துட்டே இருந்தாரு. அழுகையை மறைச்சு, சிரிச்சுட்டே இருந்தேன். என் கேரியர்லயே மறக்க முடியாத நிகழ்ச்சி அது!'' என்று முடிக்கும் வினோ கண்களில் துளிர்த்த ஈரம், நிச்சயம் 'ஃபேர்வெல்’ சோகத்துக்கானது அல்ல!