Published:Updated:

விஷ்ணுபிரியாவின் லேப்டாப், செல்போன்களை ஆய்வு செய்தது சிபிசிஐடி!

விஷ்ணுபிரியாவின் லேப்டாப், செல்போன்களை ஆய்வு செய்தது சிபிசிஐடி!
விஷ்ணுபிரியாவின் லேப்டாப், செல்போன்களை ஆய்வு செய்தது சிபிசிஐடி!
விஷ்ணுபிரியாவின் லேப்டாப், செல்போன்களை ஆய்வு செய்தது சிபிசிஐடி!

நாமக்கல்: தற்கொலை செய்துகொண்ட திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் அலுவலகம் மற்றும் வீட்டில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நேற்றிரவு விசாரணை நடத்திய நிலையில் இன்று அவரது லேப்டாப், செல்போன்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த ஜுன் மாதம் 24 ம் தேதி ஓமலூரைச் சேர்ந்த வாலிபர் கோகுல்ராஜ் தலை நசுங்கிய நிலையில் ரயில் தண்டவாளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கினை திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவத்தால் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகிய இரு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜன் தலைமையில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், பிருந்தா, சப் இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்றிரவு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் அலுவலகம் மற்றும் வீட்டில் ஆய்வு செய்தனர்.

இரவு 12 மணி வரை தொடர்ந்த இந்த ஆய்வு முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. மேலும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான கோப்புகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
 
விஷ்ணுபிரியா பணிபுரிந்த முகாம் அலுவலகத்திலும் பணிபுரியும் ஊழியர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை இன்றும் தொடர்ந்தது. நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி நாகஜோதி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விஷ்ணுபிரியாவின் லேப்டாப், செல்போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.