Published:Updated:

'இந்து கடவுளை அவமதிக்கும் எழுத்தாளர்களின் நாக்கு அறுக்கப்படும்!': ஸ்ரீராம் சேனா மிரட்டலால் சர்ச்சை!

விகடன் விமர்சனக்குழு

பெங்களூரு: இந்துக் கடவுளை அவமதிக்கும் எழுத்தாளர்களின் நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்று கர்நாடக மாநில ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்தலிங்க சுவாமி கூறியுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பை சேர்ந்த பிரசாத் அட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், வடக்கு கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த  சித்தலிங்க சுவாமி, ''ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் கோடிக்கணக்கான மக்களால் புனிதமானதாக கருதப்படுகிறது.

கே.எஸ்.பக்வான், சந்திர சேகர பாட்டில் போன்ற எழுத்தாளர்கள், இந்து கடவுள்களை அவமதிப்பது இவர்களின் மனதை புண்படுத்துகிறது. தாங்கள் வழிபடும் ராமனை ஒருவர் விமர்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படி விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளா விட்டால் எழுத்தாளர்களின் நாக்கை அவர்கள் அறுப்பார்கள்” என்று கூறினார்.

சித்தலிங்க சுவாமியின் கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.