Published:Updated:

அன்று கனவுக்கன்னியாக பார்த்தவர்கள் இன்று அண்ணியாக பார்க்கிறார்கள்: மகிழ்ச்சியில் குஷ்பு!

விகடன் விமர்சனக்குழு
அன்று கனவுக்கன்னியாக பார்த்தவர்கள் இன்று அண்ணியாக பார்க்கிறார்கள்: மகிழ்ச்சியில் குஷ்பு!
அன்று கனவுக்கன்னியாக பார்த்தவர்கள் இன்று அண்ணியாக பார்க்கிறார்கள்: மகிழ்ச்சியில் குஷ்பு!

சென்னை: "ஒரு காலக்கட்டத்தில் என்னை கனவுக்கன்னியாக பார்த்தார்கள்; இன்றைக்கு என்னை அண்ணியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்" என்று நடிகை குஷ்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
 

அன்று கனவுக்கன்னியாக பார்த்தவர்கள் இன்று அண்ணியாக பார்க்கிறார்கள்: மகிழ்ச்சியில் குஷ்பு!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரான நடிகை குஷ்புவுக்கு 44 வயது முடிந்து, நேற்று 45 வயது பிறந்தது. இதையொட்டி அவருடைய பிறந்தநாள் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து குஷ்பு அளித்த பேட்டியில், எனக்கு 45வது வயது பிறந்துள்ளது. என்னுடைய பிறந்தநாளை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. 1986ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தேன். அன்று முதல் தமிழக மக்களின் அளவிடமுடியாத அன்பு எனக்கு கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டின் மகளாக, மருமகளாக, சகோதரியாக என்னை பார்த்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் என்னை கனவுக்கன்னியாக பார்த்தார்கள். இன்றைக்கு என்னை அண்ணியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதைவிடவும் பெரிய மகிழ்ச்சி இருக்கமுடியாது. நன்றியைவிட வேறு எதுவும் சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.

தயாரிப்பாளராகவும், பிரபல டைரக்டரின் மனைவி என்ற முறையிலும் திரையின் வெளியே இருந்து திரைப்பட துறையை பார்க்கிறேன். எனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் படங்களில் நடிப்பேன்.

நடிகர் சங்கம் ஒன்றும் குடும்ப சொத்து இல்லை. ஆகவே புதிதாக இருப்பவர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நடிகர் சங்க தேர்தலில் என்னுடைய ஆதரவு நடிகர் விஷால் அணியினருக்குத்தான்" என்று கூறினார்.