Published:Updated:

விளையாடும்போது சிறுவனின் வயிற்றை துளைத்து உள்ளே சென்றது மூங்கில் குச்சி!

விளையாடும்போது சிறுவனின் வயிற்றை துளைத்து உள்ளே சென்றது மூங்கில் குச்சி!
விளையாடும்போது சிறுவனின் வயிற்றை துளைத்து உள்ளே சென்றது மூங்கில் குச்சி!

ஹோசாங்காபாத்: விளையாடும்போது சிறுவனின் வயிற்றை துளைத்துக் கொண்டு மூங்கில் குச்சி உள்ளே சென்றது. 5 மணி நேரம் மருத்துவர்கள் போராடி சிறுவனை காப்பாறி உள்ளனர்.

விளையாடும்போது சிறுவனின் வயிற்றை துளைத்து உள்ளே சென்றது மூங்கில் குச்சி!

மத்தியபிரதேச மாநிலம்  ஹோசாங்கபாத் எட்வாசை சேர்ந்த சிறுவன் ஆசிஷ் சவுகான் (13). பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மூங்கில் குச்சி ஒன்றை வைத்து விளையாடி கொண்டு இருந்த சவுகான், திடீரென ஓடி இருக்கிறான். அப்போது, எதிர்பாராதவிதமாக அவன் கால் தடுக்கி, நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறான். அந்த நேரம், அவன் கையில் வைத்திருந்த மூங்கில் குச்சி சிறுவனின் வயிற்றுக்குள் பாய்ந்து உள்ளே சென்று இருக்கிறது.

இதனால் சிறுவன் சவுகான் ரத்தம் வெளியேறியபடி வலிதாங்க முடியாமல் உதவிக்காக கதறி அழுதிருக்கிறான். தங்கள் மகனின் கதறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்த அவனது பெற்றோர், சவுகான் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சிறுவனை அருகில் இருந்த உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்திருக்கின்றனர்.

அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், சிறுவனை நர்மதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து சவுகான் உடனடியாக நர்மதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டான். அங்கு மருத்துவர்கள் சிறப்புக் குழு ஒன்று, சிறுவன் சவுகானுக்கு 5 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து அவன் வயிற்றில் இருந்து மூங்கில் குச்சியை எடுத்து காப்பாற்றியது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.