Published:Updated:

இந்திய விடுதலைக்கு துணை நின்ற அன்னிபெசன்ட் அம்மையாரின் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

இந்திய விடுதலைக்கு துணை நின்ற அன்னிபெசன்ட் அம்மையாரின் பிறந்த தின சிறப்பு பகிர்வு..
News

"மங்கையராய் பிறந்திட நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்" என்ற பாரதியின் பாடலுக்கு இணங்க பெண் பிறப்பிற்கு பெருமை சேர்க்கும் விதமாக 1 ஆம் தேதி அக்டோபர் மாதம் 1847 இல் ஐரிஸ் வம்சாவழியில் பிறந்தவர் அன்னிபெசண்ட் அம்மையார்.

சுதந்திர  காற்றை சுவாசிக்க இயலாமல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தினால் அடிமை இருளில் அவதிப்பட்ட இந்தியர்களை விடுவிக்கவும்,ஆங்கிலேயர்களை குடைகவிழ்ந்து கோல் சாய்ந்து;கொடியும் வீழ்ந்து;கோட்டை கொத்தளங்களை விட்டுத் தங்கள் குடிப்படைகளோடு நாட்டை விட்டு வெளியேறச் செய்த பேராளிகளில் இவரும் ஒருவர். இவர் நமது நாட்டின் விடுதலைக்கும்,இந்திய பெண்களின் வீட்டு விடுதலைக்கும் துணைநின்ற மாதரசி அன்னிபெசண்ட் அம்மையார்.

இந்திய விடுதலைக்கு துணை நின்ற அன்னிபெசன்ட் அம்மையாரின் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

அரசியல் மற்றும் சமூகத்தில் ஈடுபாடு மிக்கவராய் திகழ்ந்த இவர், இந்திய விடுதலைக்காக காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்தார்.காங்கிரஸ் இயக்கத்தில் தலைமை வகித்த முதல் பெண் அன்னிபெசண்ட் அம்மையாரே! இவர் ஓராண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தலைவியாக பொறுப்பேற்றார். இவர் இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மையுடையவராதலால் ஆங்கிலேயரின் அடக்குமுறை இவரை மிகவும் பாதித்தது.

விடுதலை போராட்டத்திற்காக 'காமன் வீல்' என்ற வாரப்பத்திரிக்கையையும் 'நியூ இந்தியா' என்ற தின பத்திரிக்கையையும் ஆரம்பித்தார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்குள் சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார்.அதற்காக 'ஹோம் ரூல் லீக்' என்ற இயக்கத்தை தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்.1907 ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட பிளவை, லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும்  இணைத்து வெற்றி பெற்றவர் .இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரிட்டனுக்கு. சென்ற போதும் இந்திய விடுதலைக்காக பேசியவர். சமூகம், ஆன்மீகம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு சேவை செய்துள்ளர்.

பெண் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன்.பெண்களுக்கு 21வயதுக்குள் திருமணம் செய்து வைக்க மாட்டேன்,விதவை மறுமணத்தை ஆதரிப்பேன் என்ற நிபந்தனையை விதித்தவர். படிப்பின் முக்கியத்துவம் உணர்ந்த அன்னிபெசண்ட் அம்மையார் ஏழை குழந்தைகளின் படிப்பிற்கும்,பசிக்கும் வழிசெய்ய வேண்டும் என்று விரும்பினார். இவர் ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது மட்டும் போதாது வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அவர் இறந்த சில ஆண்டுக்கு பிறகு தான் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது.இவர் 1904 ல் பெண்கள் பள்ளியை துவங்கினார்.தாழ்த்தப்பட்டவர்களுக்காக சென்னை அடையாறு உட்பட ஊரெங்கும் பள்ளிகளை ஆரம்பித்தார். இவர் பிராங்க் பெசண்ட் என்ற பாரதியை 1886 ல் திருமணம் செய்து கொண்டார்.

 இவருக்கு டிக்பி மேபேல் என்ற இரு பெண் குழந்தை இருந்தது. அதில் ஒருவர் கக்குவான் என்ற வியாதியால் மிகவும் அவதிப்பட்டார். அதைக் கண்ட இவர் கடவுளின் மேல் உள்ள நம்பிக்கையை இழந்து நாத்தியவாதியாக திகழ்ந்தவர்.கிறிஸ்தவ மதத்தில் பின்பற்றப்படும் அவநம்பிக்கையை பற்றி ஒரு  புத்தகத்தை எழுதி தனது பெயரை சுட்டிக்காட்டாமல்  வெளியிட்டார். அது மக்களிடையே  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்த  புத்தகத்தை எழுதியதியவர் இவர் தான் என்று தெரிந்த பாதிரி,  இவரை  வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். இவர் சிறந்த  எழுத்தாளரும் , மேடை பேச்சாளரும் மட்டுமின்றி  விடுதலை போராட்ட வீரராகவும் விளங்கியவர். 

இவ்வனைத்து பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தக்காரர் ஆன அன்னிபெசண்ட்  அம்மையாரின் பிறந்த தினம் இன்று!

இந்திய விடுதலைக்கு துணை நின்ற அன்னிபெசன்ட் அம்மையாரின் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

த.வினோதா