Published:Updated:

திடீரென சுய நினைவிழந்த இந்திராணி முகர்ஜி: கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை!

விகடன் விமர்சனக்குழு
திடீரென சுய நினைவிழந்த இந்திராணி முகர்ஜி: கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை!
திடீரென சுய நினைவிழந்த இந்திராணி முகர்ஜி: கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை!

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறைக்குள் இருக்கும் இந்திராணி முகர்ஜி திடீரென சுய நினைவிழந்து உள்ளார். தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திடீரென சுய நினைவிழந்த இந்திராணி முகர்ஜி: கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை!

ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சி.இ.ஓ பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி முகர்ஜி, தனது முதல் கணவருக்கு பிறந்த மகளான ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள பைகுல்லா பெண்கள் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ள இந்திராணி, நேற்று தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென சுய நினைவிழந்த இந்திராணி முகர்ஜி: கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை!

இது குறித்து மருத்துவமனை முதல்வர் டி.பி.லஹானே கூறுகையில், இந்திராணியை மதியம் 2 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவர் சுயநினைவை இழந்திருந்தார். அவர் சில மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அதன் அடிப்படையிலேயே அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது நிலைமை மிகவும் மோசமாகதான் உள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் கூற முடியும்" என்றார்.

திடீரென சுய நினைவிழந்த இந்திராணி முகர்ஜி: கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை!

இந்நிலையில், இந்திராணியின் திடீர் உடல் நலக் குறைவுக்கான காரணம் என்ன என்பதை விசாரிக்குபடி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக உத்தரவிட்டு உள்ளார்.