Published:Updated:

மின்னல் தாக்கி மேற்கு வங்காளத்தில் 6 பேர் பரிதாப பலி!

விகடன் விமர்சனக்குழு
மின்னல் தாக்கி  மேற்கு வங்காளத்தில் 6 பேர் பரிதாப பலி!
மின்னல் தாக்கி மேற்கு வங்காளத்தில் 6 பேர் பரிதாப பலி!

கொல்கத்தா: மின்னல் தாக்கி  மேற்கு வங்காள மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

மின்னல் தாக்கி  மேற்கு வங்காளத்தில் 6 பேர் பரிதாப பலி!

மேற்கு வங்காள மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இங்குள்ள பிர்பம் மாவட்டம், பகதூர்பூர் பகுதியில் கருங்கல் குவாரியில் நேற்று வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளர்களான ஷேக் சபிர் (42), ஷேக் அப்ரஜ் (34), ஷேக் அக்தர் (32) ஆகிய மூன்று பேர் மின்னல் தாக்கியதில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல், இந்த மாவட்டத்தின் எபாய் கிராமத்தைச் சேர்ந்த தஷாமி (13), சைதியா பகுதியைச் சேர்ந்த தாலு முர்டி (48), மட்டால் முர்டி (55) ஆகிய மூன்று பேரும் மின்னல் தாக்கி நேற்று பரிதாபமாக பலியாகினர்.