Published:Updated:

இந்தியாவில் முதலிடம் : 37 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தமிழக சிறைக்கைதிகள் சாதனை!

விகடன் விமர்சனக்குழு
இந்தியாவில் முதலிடம் : 37 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தமிழக  சிறைக்கைதிகள் சாதனை!
இந்தியாவில் முதலிடம் : 37 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தமிழக சிறைக்கைதிகள் சாதனை!

மிழகத்தில் சிறைக் கைதிகள் தயாரித்த பொருட்களின் விற்பனை மூலம் கடந்த ஆண்டு 36 கோடியே 97 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் முதலிடம் : 37 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தமிழக  சிறைக்கைதிகள் சாதனை!

தமிழக சிறைகளில் கைதிகளுக்கு தையல், நெசவு, தச்சு வேலை, விவசாயம், சோப்பு தயாரிப்பு போன்ற பணிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக கைதிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதோடு, அவர்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளி சந்தைகளில் விற்பனையும் செய்யப்படுகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததன் மூலம்,  தமிழக அரசுக்கு 36 கோடியே 97  லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழக சிறைக் கைதிகள்தான் இதில் முதலிடம் பிடித்துள்ளனர். ஒரு தமிழக சிறைகைதியின் சராசரி ஆண்டு வருமானம் 23 ஆயிரத்து 291 ரூபாய் ஆகும்.

இந்த பட்டியலில் கேரளம் இண்டாவது இடத்தை பிடிக்கிறது. கேரள சிறைக்கைதிகள் உற்பத்தி பொருட்களின் விற்பனை, கடந்த ஆண்டு 21 கோடியே 43 லட்ச ரூபாயை எட்டியுள்ளது.  கேரள கைதிகளின் ஆண்டு வருமானம் சராசரியாக 30  ஆயிரம் ரூபாய் ஆகும்.