Published:Updated:

ரணகளமாகும் உ.பி : துப்பட்டாவால் தலையை மூடாத 4 வயது சிறுமி தந்தையால் அடித்துக் கொலை

விகடன் விமர்சனக்குழு
ரணகளமாகும் உ.பி : துப்பட்டாவால் தலையை மூடாத 4 வயது சிறுமி  தந்தையால் அடித்துக் கொலை
ரணகளமாகும் உ.பி : துப்பட்டாவால் தலையை மூடாத 4 வயது சிறுமி தந்தையால் அடித்துக் கொலை

த்தரபிரேதசத்தில் துப்பட்டாவால் முகத்தையும், தலையையும் மறைக்காமல் உணவு அருந்திய  4 வயது சிறுமியை அவரது தந்தையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரணகளமாகும் உ.பி : துப்பட்டாவால் தலையை மூடாத 4 வயது சிறுமி  தந்தையால் அடித்துக் கொலை

பக்ரீத் பண்டிகையையொட்டி மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இக்லாக் என்ற இஸ்லாமிய பெரியவர் அண்மையில் உத்தரபிரேசத்தில் கிராம மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  டெல்லியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிசோதா என்ற கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தால் இந்தியாவே அதிர்ந்து போனது.

நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த முதியவர் ஒருவர்,  கோயில் அருகே எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி கொலைக் களமாகி வரும் உத்தர பிரதேசத்தில் நேற்று மற்றொரு அதிர்ச்சிக்கரமான சம்பவம் நடந்துள்ளது.

பரேலி  பகுதியை சேர்ந்தவர் ஜாபர் ஹூசைன். இவரது மனைவி நயம். இவர்களுக்கு ஃபர்ஹீன் என்ற 4 வயது மகள் உண்டு. நேற்று மதியம் குடும்பத்தினர் உணவருந்தி கொண்டு இருந்தனர்.

அப்போது சிறுமி ஃபர்ஹீன் துப்பட்டாவால்  தலையை மூடியவாறு உணவருந்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை ஹூசைன், அந்த சிறுமியின் தலையை பிடித்து தரையில் பல முறை மோதச் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதனைத் தொடர்ந்து ஹூசைன், தனது மனைவியிடம் சிறுமியின் உடலை வீட்டுக்குள்ளேயே புதைத்து விட கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்து அக்கம்பக்கத்தினரிடம்  தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  போலீசார்,  சிறுமி ஃபர்ஹீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜாபர் ஹூசைனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.