Published:Updated:

தடுமாறி விழுந்தார் ஆர்.எம்.வீரப்பன்; மருத்துவமனையில் அனுமதி!

விகடன் விமர்சனக்குழு
 தடுமாறி விழுந்தார் ஆர்.எம்.வீரப்பன்; மருத்துவமனையில் அனுமதி!
தடுமாறி விழுந்தார் ஆர்.எம்.வீரப்பன்; மருத்துவமனையில் அனுமதி!
 தடுமாறி விழுந்தார் ஆர்.எம்.வீரப்பன்; மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திடீர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நேற்று தன்னுடைய வீட்டில் குளியல் அறைக்கு செல்வதற்காக, தான் அமர்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்த போது, தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதில் அவருக்கு இடுப்பில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்த அவரை,  உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மயில்வாகனன் ஆர்.எம்.வீரப்பனுக்கு இடுப்பில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்தார். தொடர்ந்து அவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆர்.எம்.வீரப்பனை, அவருடைய குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின் இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.