Published:Updated:

5800 டன் பருப்பு பறிமுதல்: மத்திய அரசு நடவடிக்கை!

Vikatan Correspondent
 5800 டன் பருப்பு பறிமுதல்: மத்திய அரசு நடவடிக்கை!
5800 டன் பருப்பு பறிமுதல்: மத்திய அரசு நடவடிக்கை!

புதுடெல்லி: பதுக்கல் நபர்களிடம் இருந்து 5800 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை, தீபாவளிக்கு முன்னதாகவே மிக வேகமாக உயர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் பதுக்கல்காரர்களிடம் இருந்து 5800 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

 5800 டன் பருப்பு பறிமுதல்: மத்திய அரசு நடவடிக்கை!

நாடு முழுவதும் துவரம் பருப்பின் விலை 200 ரூபாயை தாண்டி உயர்ந்துவரும் நிலையில்,  ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை குறைத்தும், மொத்த கொள்முதல் செய்பவர்களுக்கு இருப்புவைக்க அனுமதிக்கப்பட்ட அளவீட்டை குறைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய,  மாநில அரசுகள்  எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த மாதங்களில் பதுக்கல் பேர்வழிகளுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 5800 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று(செவ்வாய்) டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் சி. விஸ்வநாதன்,  " தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 2,549 டன், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 2,549 டன், ஆந்திராவில் 600 டன், கர்நாடகத்தில் 360 டன் பருப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றும் கர்நாடகா  மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களில் இதுபோன்ற அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதில் நல்லபலன் கிடைத்து வருகிறது" என்று கூறினார்.