Published:Updated:

பிரியங்காவை அரசியல் வாரிசாக்க விரும்பினார் இந்திரா: உதவியாளர் தகவல்!

Vikatan Correspondent
பிரியங்காவை அரசியல் வாரிசாக்க விரும்பினார் இந்திரா: உதவியாளர் தகவல்!
பிரியங்காவை அரசியல் வாரிசாக்க விரும்பினார் இந்திரா: உதவியாளர் தகவல்!
பிரியங்காவை அரசியல் வாரிசாக்க விரும்பினார் இந்திரா: உதவியாளர் தகவல்!

புதுடெல்லி: தனது பேத்தி பிரியங்காவை அரசியல் வாரிசாக்க முன்னாள் பிரதமர் இந்திரா விரும்பினார் என அவருக்கு உதவியாளராக இருந்த மதன்லால் பொதேதார் கூறியுள்ளார்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவருக்கு மிகவும் நெருக்கமான உதவியாளராக இருந்தவர் மதன்லால் பொதேதார். மத்திய அமைச்சர், காஷ்மீர் அமைச்சர், மாநிலங்களவை எம்.பி. என பல்வேறு பதவிகளை வகித்த இவர், 'இந்திய அரசியல் சாணக்கியர்' என்றும் புகழப்பட்டார்.

இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து விலகிய பொதேதார், தற்போது இந்திரா காந்தியின் கடைசி நாட்கள் குறித்த குறிப்புகளை புத்தகமாக எழுதியுள்ளார். 'சீனர் லீவ்ஸ் (Chinar Leaves)' என பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம் 30-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பிரியங்காவை அரசியல் வாரிசாக்க விரும்பினார் இந்திரா: உதவியாளர் தகவல்!

இந்த புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்களை பொதேதார் எழுதியுள்ளார். அதில், ''இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு 1984ஆம் ஆண்டு ஓய்வு எடுப்பதற்காக காஷ்மீர் சென்றிருந்தார். அங்குள்ள கோயிலுக்கு சென்று வந்த இந்திரா சோகத்துடன் காணப்பட்டார்.

மேலும், எனது வாழ்க்கை முடியப் போகிறது என்றும், பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும். அவள் மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்த, வெற்றிகரமான தலைவராக வருவாள் என்றும் என்னிடம் கூறினார்.

இந்திரா காந்தி கூறியது போல், 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31–ம் தேதி கொல்லப்பட்டார். இந்த தகவல் குறித்து 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, சோனியாவுக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால், அதற்கு சோனியா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை'' எனக் கூறியுள்ளார்.