Published:Updated:

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் அடுத்த ஆண்டு அறிமுகம்!

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் அடுத்த ஆண்டு அறிமுகம்!
News
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் அடுத்த ஆண்டு அறிமுகம்!

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் அடுத்த ஆண்டு அறிமுகம்!

ந்தியாவின் 'புல்லட் ரயில்' என்று வர்ணிக்கப்படும் 'காட்டிமான் எக்ஸ்பிரஸ்' ரயில், வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இயக்கப்படுமென்று வடமத்திய ரயில்வேயின் பொது மேலாளர் அருண் சக்சேனா தெரிவித்துள்ளார்.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் அடுத்த ஆண்டு அறிமுகம்!

இது குறித்து அவர் கூறுகையில், '' டெல்லி -ஆக்ரா இடையே இந்த ரயில் முதன் முதலாக இயக்கப்படவுள்ளது. காட்டிமான் எக்ஸ்பிரஸ் இதுவரை 6 முறை பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஜுன் 2-ம் தேதி இந்த ரயிலின் வேகம் பரிசோதிக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

195 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த டெல்லி -ஆக்ரா மார்கத்தை 105 நிமிடங்களில் காட்டிமான் எக்ஸ்பிரஸ் கடந்தது. மதுரா ரயில் நிலையத்தில் மட்டும் காட்டிமான் ரயில் 2 நிமிடங்கள் நின்று செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய இந்தியாவின் அதிவேக ரயிலான போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ், டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு 2 மணி நேரம் 6 நிமிடத்தில் செல்கிறது" என்றார்.