Published:Updated:

அம்பேத்கர் வசித்த லண்டன் வீட்டை வாங்க ரூ.25 லட்சம் பயணச் செலவு செய்த அமைச்சர்கள்!

விகடன் விமர்சனக்குழு
அம்பேத்கர் வசித்த லண்டன் வீட்டை வாங்க ரூ.25 லட்சம் பயணச் செலவு செய்த அமைச்சர்கள்!
அம்பேத்கர் வசித்த லண்டன் வீட்டை வாங்க ரூ.25 லட்சம் பயணச் செலவு செய்த அமைச்சர்கள்!

மும்பை: இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி என்று  அழைக்கப்படும் அம்பேத்கர், லண்டனில் தங்கியிருந்த வீட்டை வாங்கிட இங்கிலாந்து சென்ற மகாராஷ்டிர மாநில அமைச்சர்கள்  பயணச் செலவாக ரூ.25 லட்சத்தைக் கணக்குக் காட்டியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்பேத்கர்,லண்டனில் பொருளாதார கல்வி பயின்றபோது அங்குள்ள மூன்று மாடி வீட்டில் தங்கியிருந்தார். இந்த வீட்டை தற்போது மகாரஷ்டிர மாநில அரசு விலைக்கு வாங்கி இருக்கிறது. இதற்காக  அம்மாநில மூத்த அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகள் குழுவாக லண்டன் பயணம் மேற்கொண்டனர்.

அம்பேத்கர் வசித்த லண்டன் வீட்டை வாங்க ரூ.25 லட்சம் பயணச் செலவு செய்த அமைச்சர்கள்!

இந்நிலையில், லண்டன் பயணத்துக்கான செலவைத்  தெரியப்படுத்துமாறு அனில் கல்களி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், ‘‘இதுவரை அம்பேத்கர் வீட்டை கையகப்படுத்துவதற்காக மாநில அரசு சார்பில் செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ.25 லட்சம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.