Published:Updated:

வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் கணவன், மனைவி பரிதாப பலி!

Vikatan Correspondent
வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் கணவன், மனைவி பரிதாப பலி!
வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் கணவன், மனைவி பரிதாப பலி!

சென்னை: வேளச்சேரியில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில், கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் கணவன், மனைவி பரிதாப பலி!

சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஆர்த்திஸ்ரீ (4), திவ்யாஸ்ரீ (2) என்ற இரு குழந்தைகள் உள்ளது. கருணாநிதி, அங்குள்ள டைல்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், தங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு கருணாநிதி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் கணவன், மனைவி பரிதாப பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி கருணாநிதியும், சுதாவும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கதறி அழுது கொண்டிருந்தனர்.

உடனே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர். இந்த சம்பவத்தால் கருணாவின் குழந்தைகள் அனாதையாக தவித்து வருகின்றன.

"இதற்கு எல்லாம், மின்வாரிய ஊழியர்களின் பொறுப்பற்ற செயலே காரணம். நாங்கள் பலமுறை மின்வாரிதத்திற்கு இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் அவர்கள் அலட்சியமாக போனை எடுக்கவில்லை' என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் கணவன், மனைவி பரிதாப பலி!

மேலும், மின்வாரியத்தை கண்டித்து வேளச்சேரி 100 அடி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு கூடி இருந்த பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்ப முயற்சித்தனர்.

அந்த நேரத்தில் அங்கு வந்த வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.