Published:Updated:

சஞ்சய் தத்துக்கு ஏ.கே.56 ரக துப்பாக்கி கொடுத்தற்காக சகோதரரை அடித்த தாவூத்!

Vikatan Correspondent
சஞ்சய் தத்துக்கு ஏ.கே.56 ரக துப்பாக்கி கொடுத்தற்காக சகோதரரை அடித்த தாவூத்!
சஞ்சய் தத்துக்கு ஏ.கே.56 ரக துப்பாக்கி கொடுத்தற்காக சகோதரரை அடித்த தாவூத்!

டிகர் சஞ்சய் தத்துக்கு ஏ.கே. 56 ரக துப்பாக்கியை கொடுத்ததற்காக நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம், தனது சகோதரரை அடித்ததாக மும்பை தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்திய அதிகாரி எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சஞ்சய் தத்துக்கு ஏ.கே.56 ரக துப்பாக்கி கொடுத்தற்காக சகோதரரை அடித்த தாவூத்!

கடந்த 1993-ம் ஆண்டு, மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்ட மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம், இந்தியாவில் இருந்து தப்பியோடி பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பை தொடர் குண்டு வெடிப்பை மையப்படுத்தி, 'டயல் டி ஃபார் டான்' என்ற புத்தகத்தை இந்த குண்டுவெடிப்பு நிகழ்வு குறித்து விசாரித்து வந்த சிபிஐ அதிகாரியும், டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனருமான நீரஜ் குமார் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் தாவூத் இப்ராஹிமிடம், தொலைபேசியில் தான் உரையாடிய சில தகவல்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

சஞ்சய் தத்துக்கு ஏ.கே.56 ரக துப்பாக்கி கொடுத்தற்காக சகோதரரை அடித்த தாவூத்!

அந்த புத்தகத்தில்,  நடிகர் சஞ்சய் தத்துக்கு எப்படி ஏ.கே. 56 ரக  துப்பாக்கி கிடைத்தது என்ற கேள்விக்கு தாவூத் கூறிய பதிலையும்  நீரஜ் குமார் குறிபிப்பிட்டுள்ளார். அவரிடம் தாவூத் கூறியதாக சொல்லப்பட்டுள்ள விஷயம்,  '' சஞ்சய் தத் நடித்த 'யால்கல்' படப்பிடிப்பு துபாயில் நடைபெற்றபோது, அவருக்கும் எனது இளையசகோதரர் அனிசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் அடிப்படையில் தனது பாதுகாப்புக்காகவும், குடும்பத்தினர் பாதுகாப்புக்காகவும் சஞ்சய் தத் ஒரு ஆயுதம் கேட்டுள்ளார்.

இதையடுத்து அனிஸ் எனது அனுமதியை பெறாமலேயே சஞ்சய் தத்துக்கு ஏ.கே. 56 ரக துப்பாக்கியை கொடுத்துள்ளார். பின்னர்தான் இந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது. இது குறித்து எனது சகோதரனிடம் விசாரித்தேன். உண்மை தெரிய வந்ததும் அவனை அடிக்கவும் செய்தேன். ஆனால் சஞ்சய் தத்துக்கும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை''  என்று தாவூத் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்புக்கு பிறகு சஞ்சய் தத் வீட்டில் இருந்து   ரஷ்ய தயாரிப்பான ஏ.கே. 56 ரக எந்திர துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுடன் அவரது தண்டனை காலம் முடிவுக்கு வருகிறது. தற்போது 56 வயதான சஞ்சய் தத், புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.